ரத்த சோகை வெல்லம் வெல்லும்!---ஹெல்த் ஸ்பெஷல்,

ரத்த சோகை வெல்லம் வெல்லும்! ப ழங்குடி மக்களின் உடல்நலம் கருதி இனி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்கத் திட...


ரத்த சோகை வெல்லம் வெல்லும்!

ழங்குடி மக்களின் உடல்நலம் கருதி இனி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்கத் திட்டமிட்டு இருக்கிறது அரசு. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஓர் இனிப்புச் செய்தி. ரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. வெல்லத்தின் துணையுடன் ரத்தசோகையை எப்படி வெல்வது? ஈரோடு அரசு சித்த மருத்துவர் ஆர்.கண்ணன், உணவியல் நிபுணர் குந்தலா ரவி சொல்லும்  வழிகள் உங்களுக்காக!
 ரத்தசோகை?
இரும்புச் சத்துக் குறைவுதான் ரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும். முகம் வீங்கும்.  கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள்.
 இரும்பு வெல்லம்!
பனைவெல்லத்தைவிடவும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும் 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரும்புச் சத்தும் கால்சியமும் சேரும்போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.
நீடித்த பலன்!
சீனியை உட்கொள்ளும்போது சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேரும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கிவைத்துத் தேவைப்படும்போது தரும்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது சோர்வாகவும், படபடப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வாதம், பித்தம்  மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தைத் துணை மருந்தாகத் தரலாம். வெல்லத்தைச் சமையலில் பயன்படுத்தும்போது சுவை அதிகரிக்கும்.
ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால், வயிற்றுக் கடுப்பு கழிச்சல் தீரும். குடல் புழுக்களைக்கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தைச் சிறிது அளவு உட்கொள்ளலாம்.
எப்படி எல்லாம் சாப்பிடலாம்?
வெயிலில் வெளியே போய்விட்டு, சோர்வாகத் திரும்பும்போது எலுமிச்சைச் சாறுடன் வெல்லத்தைக் கலந்துப் பருகினால், சோர்வு நீங்கிப் புத்துணர்வு உண்டாகும். சில குழந்தைகள் சப்பாத்திக்குச் சீனி தொட்டுச் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாக வெல்லத்தைப் பொடி செய்து கொஞ்சம் நெய்யை உருக்கிக் கலந்து தந்தால் நன்றாகச் சாப்பிடுவார்கள். வெல்ல அடை செய்தும் தரலாம். வெல்லப் பாயசம், அப்பம், சர்க்கரைப் பொங்கல், அதிரசம், வெல்லப் புட்டு, வெல்லக் கொழுக்கட்டை, வெல்லப் பால் பணியாரம், வெல்லச் சீடை ஆகியவையும் வெல்லத்தினால் செய்யக்கூடிய சுவையும் சத்தும் நிரம்பிய தின்பண்டங்கள். பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை, எள் உருண்டை போன்றவற்றைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அவல் மற்றும் பொரியோடு வெல்லம் சேர்த்து எந்தப் பண்டத்தைச் செய்தாலும் நன்றாக இருக்கும். உடலுக்கு நல்ல சத்தும் கிடைக்கும்!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6938901534571552944

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item