வாங்கிபாத்... வாவ்!---சமையல் குறிப்புகள்,
வாங்கிபாத்... வாவ்! வாங்கிபாத் தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - 6, தனியா, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிள காய...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_8125.html
வாங்கிபாத்... வாவ்!
வாங்கிபாத்
செய்முறை: கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, கொப்பரைத் துருவல் சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து... நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்க்கவும். காய்க்கேற்ப உப்பு சேர்த்து, மஞ்சள்தூளையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வதங்கியவுடன் வடித்த சாதம், பொடித்த மசாலா, மீண்டும் சாதத்துக்கேற்ப உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து பரிமாற வும். இதற்கு தயிர்பச்சடி நல்ல காம்பினேஷன்.
வாங்கி பாத்: மசாலா பொடி தயாரிக்கும்போது சிறிது வேர்க்கடலை சேர்த்தால்... மேலும் ருசியாக இருக்கும்.
Post a Comment