நீங்களும் செய்யலாம் பட்டாம்பி பரோட்டா---சமையல் குறிப்புகள்,
மைதா - அரை கிலோ, சீனி - 100 கிராம், பால் - அரை லிட்டர், நல்லெண்ணெய் - கால் லிட்டர், உப்பு, சோடா உப்பு - சிறிதளவு. மைதாவை சலித்துக் கொ...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_9888.html
மைதா - அரை கிலோ,
சீனி - 100 கிராம்,
பால் - அரை லிட்டர்,
நல்லெண்ணெய் - கால் லிட்டர்,
உப்பு, சோடா உப்பு - சிறிதளவு.
மைதாவை சலித்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு, சோடா உப்புவை கலந்து கொள்ளுங்கள். சீனியை பாலில் கரைத்துக் கொள்ளுங்கள். மாவில் சிறிது, சிறிதாக பாலை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து எலுமிச்சை அளவுக்கு உருட்டிக் கொள்ளுங்கள். ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி உருட்டிய மாவை அதில் நனைத்தெடுத்து ஒருமணி நேரம் ஊற வையுங்கள்.
பின் அகலமான தட்டை திருப்பிப்போட்டு மாவை முழுதும் பரப்பி சப்பாத்திக் கட்டையால் தேய்த்துக் கொள்ளுங்கள். தட்டு முழுதும் பரவியவுடன் எடுத்து நான்கைந்தாகச் சுற்றி மீண்டும் சப்பாத்திக் கட்டையால் தேய்த்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் தனித்தனியாக போட்டு பொரித்தெடுங்கள். வெந்ததும், இரு கைகளாலும் பரோட்டாவை உள்நோக்கி தட்டினால் மிருதுவாகும்!

1 comment
ரொம்ப சிம்பிளாக இருக்கிறது. செய்து பாத்துடவேண்டியதுதான்.
Post a Comment