மசால் வடை குழம்பு---சமையல் குறிப்புகள்,
தேவையானவை: மசால் வடை.....................10 வெங்காயம்......................75கிராம் பச்சை மிளகாய்.................2 மிளகாய் பொடி..........
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_8254.html
தேவையானவை:
மசால் வடை.....................10
வெங்காயம்......................75கிராம்
பச்சை மிளகாய்.................2
மிளகாய் பொடி...................1 1/2 தேக்கரண்டி
மல்லி பொடி .......................2தேக்கரண்டி
மஞ்சள் பொடி.....................கொஞ்சம்
தேங்காய் துருவியது..........5 தேக்கரண்டி
சோம்பு.....................................1 /2 தேக்கரண்டி
முந்திரி...................................5
இஞ்சி........................................சிறு துண்டு
எண்ணெய்.................................2 தேக்கரண்டி
கிராம்பு........................................2
மிளகு..........................................1 /4 தேக்கரண்டி
உப்பு ...........................................தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி...............1 தேக்கரண்டி

வடை செய்ய:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பருப்பு உருண்டையை வடையாக தட்டி,எண்ணெயில் போடவும். மேல் பக்கம் சிவந்ததும், அதனைத் திருப்பிவிடவும். இருபுறமும் சிவந்ததும் அரிகரண்டியால் எண்ணெய் இல்லாமல் வடித்து எடுக்கவும்.
செய்முறை:
மசால் வடையை கடையிலும் வாங்கலாம். வீட்டிலும் சுடலாம். வெங்காயம + பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல் சோம்பு + முந்திரி வறுத்து, அத்துடன் தேங்காயையும் போட்டு நன்கு வறுத்து, இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கிராம்பு, மிளகு போட்டு பொரியவிட்டு, அதிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதில் மிளகாய்,மல்லி +மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பின் அதிலேயே அரைத்த தேங்காய + உப்பு போட்டு நன்கு வதக்கிய பின், 3 டம்ளர் நீர் ஊற்றவும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் மசால் வடைகளைப் போடவும். வடை குழம்பிலுள்ள நீரைக் குடித்து விடும். குழம்பு போதுமான அளவு கெட்டியானதும், மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இந்த மசால்வடைக் குழம்பை, சாதத்திற்கு ஊற்றி சாப்பிடலாம், அதைவிட இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, ஆப்பம், இடியாப்பம், பரோட்டாவுக்கு செமையான துணை!

Post a Comment