மழைக்காலத்தில் செலவில்லா மருத்துவம் --மருத்துவ டிப்ஸ்,
செலவில்லா மருத்துவம் மழைக்காலத்தில் அடிக்கடி வரும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு நம் வீட்டில் உள்ள பொரு...
https://pettagum.blogspot.com/2012/09/blog-post_671.html
செலவில்லா மருத்துவம்
மழைக்காலத்தில் அடிக்கடி வரும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கு நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதில் நிவாரணம் பெற முடியும்.
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட இருமல், சளி, மூக்கடைப்பு, காய்ச்சல் குணமாகும்.
இரண்டு ஆடாதொடை இலையுடன், எட்டு மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டையைக் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு சரியாகும்.
திப்பிலி, ஓமம், மஞ்சள், மிளகு - இந்த நான்கையும் சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி, வேப்ப எண்ணெயில் நனைக்க வேண்டும். இந்தத் துணியைப் பற்றவைத்தால் புகை வரும். அந்தப் புகையை - ஆவிபிடிப்பதுபோலப் போர்வையை நன்றாக மூடிக்கொண்டு - பிடித்தால் மூக்கடைப்பு, தலைபாரம் குணமாகும்.
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து, வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட, இருமல் குணப்படும்.
ஒரு துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மென்று சாறைக் குடிக்க இருமல், சளி, தொண்டைக்கட்டு சரியாகும்.
சித்தரத்தையை நெருப்பில் சுட்டுத் தேனில் உரச வேண்டும். பிறகு அதைத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.
துளசியை இடித்துச் சாறு பிழிந்து குடிக்க சளிப் பிரச்னை தீரும்.
திப்பிலிப் பொடி, வெற்றிலைச் சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, இருமல், சளி, காய்ச்சல் குணப்படும்.
Post a Comment