பாதாம் பருப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா! --- உணவே மருந்து,
பாதாம் எண்ணெய் சருமத்திற்கு மிருதுவையும், புத்துணர்ச்சியையும் தரும்; பாதாம் பால், வயிற்றுக்கு, சிறுநீரக பாதைக்கு, நுரையீரலுக்கு நல்லது;...
ஜீரண மண்டலத்திற்கு நல்லது; உடலுக்கு வலிமையும், வீரியமும் கொடுக்கும்; கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்தும்; நார்ச்சத்தும், கொழுப்புச்சத்தும் கொண்டு உள்ளது; இதயத்திற்கு மிகவும் இதமானது; இதயத்தின் நண்பன் என்றே சொல்லலாம்; பாதாம் எண்ணெய் சருமத்திற்கு மிருதுவையும், புத்துணர்ச்சியையும் தரும். பாதாம் பால், வயிற்றுக்கு, சிறுநீரக பாதைக்கு, நுரையீரலுக்கு நல்லது; ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில், பாதாம் முக்கிய பங்கேற்கிறது; உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்; புற்றுநோய் வருவதை தடுக்கும் என, நிறைய தகவல்கள் வந்து விழுகின்றன.
இப்படி நன்மைகள் பல செய்யும் பாதாம் பருப்பு, உலகம் முழுவதும் பயிர் செய்யப்பட்டாலும், உயர்ந்த தரமான பாதாம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தான் உற்பத்தியாகிறது. அமெரிக்கர்கள், தங்கள் உணவில், ஏதாவது ஒரு வகையில், பாதாமை அன்றாடம் சேர்த்துக் கொள்ளத் தவறுவதில்லை. பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவர் அல்லது வெண்ணையாக்கி ரொட்டியில், சப்பாத்தியில் தடவி சாப்பிடுவர்; பாதாமை வறுத்து, பலவித சுவைசேர்த்து சாப்பிடுவர்.
அமெரிக்கா வாழ் இந்தியரான சி.வி.பிரகலாதன், தன் சொந்த அனுபவத்தில், பாதாமின் நன்மைகளை உணர்ந்தார். தன் குழந்தை நல்ல முறையில் பிறக்கவும், வளரவும், அங்குள்ள டாக்டர்கள் சிபாரிசு செய்த உணவே பாதாம் என்று இருந்ததும், அது தொடர்பாக மேலும், அவர் சிறிது ஆராய்ச்சி செய்தார். எல்லா வயதினருக்கும், எல்லா நிலையிலும், பாதாம் ஏதோ ஒரு நன்மை செய்வதை அறிந்தார். அமெரிக்கர்களின் ஆரோக்கிய ரகசியங்களில், பாதாம் முக்கியமான இடத்தை வகிப்பதை அறிந்ததும், அதை தன் தாய்நாடான இந்தியாவிற்கு, அதிலும், தமிழக மக்களுக்கு முதலில் அறிமுகம் செய்ய விரும்பினார்.
இதன் காரணமாக, அங்குள்ள உயர்ரக பாதாம் உற்பத்தியாளர்களிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அங்கிருந்து தரமான பாதாமை இங்கு இறக்குமதி செய்தார். "நியூ லைப் ஹெல்த் கேர்' நிறுவனம் ஒன்றை துவங்கி, அதன் மூலம், அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும், பாதாம் பொருட்களை, இங்கே நம் சுவைக்கு ஏற்ப தயாரித்து வழங்கி வருகிறார். தற்போது, சென்னை போரூர் பகுதியில் உள்ள டி.எல்.எப்.,பின் உணவு மண்டலத்தில், ஒரு அரங்கு அமைத்துள்ளார். இந்த அரங்கில், இவரது தயாரிப்பான உப்பிட்ட, உப்பிடாத, ஜீரா கலந்து என, பலவித சுவைகளில் வறுத்த பாதாம் பருப்பு கிடைக்கிறது.
மேலும், இவரது சிறப்பு தயாரிப்பான பாதாம் வெண்ணெய், 100 கிராம், 200 கிராம் அளவில் கிடைக்கிறது. இந்த பாதாம் வெண்ணெயை, ரொட்டி, சப்பாத்தி என, உங்களுக்கு பிரியப்பட்ட எதனுடனும் சேர்த்து சாப்பிடலாம். கூடுதல் சுவை, கூடுதல் சத்து. மேலும், இந்த பாதாம் வெண்ணெய் தான், எதிர்பார்த்த மிருது தன்மையை தருகிறது என பல, அழகு நிலையங்களில் பயன்படுத்துகின்றனர் என்பது, குறிப்பிட வேண்டிய விஷயம். இத்துடன், பாதாம், "ட்ரிங்ஸ்ம்' தயாரித்து கொடுக்கிறார். விவரம் தெரிந்தவர்கள், அமெரிக்காவில் இருந்து நண்பர்கள் வரும்போது, கிலோ கணக்கில் பாதாம் பருப்பு மற்றும் அது தொடர்பான பாதாம் பொருட்கள் வாங்கிவரச்சொல்வர். இப்போது, பிரகலாதன் உங்களுக்காக அந்த வேலையை சுவையாக செய்து கொண்டு இருக்கிறார். இதை மக்களிடம் கொண்டு போய் பரவலாக சேர்க்க வேண்டும். வியாபார நோக்கத்திற்காக அல்ல. ஆரோக்கியமான சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காக என்று சொல்லும் பிரகலாதனிடம், உங்கள் பாதாம் பொருள் தேவைக்கு மற்றும் வியாபார விசாரணைக்கு தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண்: 98400 16848
Post a Comment