கேரளா புரோட்டா---சமையல் குறிப்புகள்,
என்னென்ன தேவை? மைதா மாவு - 2 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தயிர் - 2 டீஸ்பூன், ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, எண...

https://pettagum.blogspot.com/2012/09/blog-post_2699.html
என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தயிர் - 2 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதன் மேல் கால் கப் எண்ணெயை ஊற்றி நன்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். மாவிலிருந்து சிறிதை எடுத்து சப்பாத்தி மாதிரித் திரட்டவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி, மேலே சிறிது மாவு தூவி, பிறகு விசிறி அல்லது புடவைக் கொசுவம் மாதிரி மடிக்கவும். அதை அப்படியே சுருட்டி, கனமாகத் திரட்டவும். தோசைக்கல்லில் மிதமான தீயில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுத்து இரண்டு கைகளாலும் கை தட்டுவது போல, புரோட்டாக்களின் பக்கவாட்டில் தட்டி, குருமாவுடன் பரிமாறவும்.
மைதா மாவு - 2 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தயிர் - 2 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
Post a Comment