பல் வலியைத் தீர்க்க புங்கம் பட்டை:-இயற்கை வைத்தியம்
பல் வலியைத் தீர்க்க: பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_990.html
பல் வலியைத் தீர்க்க:
பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.
அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.
பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.
கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.
Post a Comment