சோயா பகோடா -- சமையல் குறிப்பு
சோயா பகோடா தேவையானவை சோயா உருண்டைகள் - 1 கப் நறுக்கிய வெங்காயம் - 1 கப் நறுக்கிய கோஸ் - 1 கப் இஞ்சி, பூண்டு விழுது ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_14.html
சோயா பகோடா
தேவையானவை
சோயா உருண்டைகள் - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய கோஸ் - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
கடலை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 கப்
செய்யும் முறை
சோயா உருண்டைகளை உப்பு சேர்த்த வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து எடுத்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த சோயா உருண்டைகளைப் போட்டு அத்துடன், வெங்காயம், கோஸ், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, கடலை மாவு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் மாவை கைகளால் எடுத்து பகோடாவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
உடலுக்கு சத்தான ஒரு மாலை உணவாக இது இருக்கும்.
Post a Comment