சிக்கன் பால்ஸ்
சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர...

சிக்கன் பால்ஸ்
சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்
சிக்கன் கொத்தியது - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
முட்டை - 1
ரொட்டித் துண்டு - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு
*
செய்முறை
* கொத்திய கோழி இறைச்சியை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* பிறகு மிக்சியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.
* இதனுடன் சிக்கன் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு இறுக்கமாக பிசையவும்.
* இந்தக் கலவையை கோலியளவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
* ரொட்டியைச் சதுரமாக சிறிய க்யூபாக வெட்டிக் கொள்ளவும்.
* சிக்கன் உருண்டைகளை ரொட்டித் துண்டில் வைத்து ரோல் செய்யவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சிக்கன் பால்சை பொரித்தெடுக்கவும்.
Post a Comment