வீட்டுக்குறிப்புக்கள்.....டிப்ஸ்...டிப்ஸ்
ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_3619.html
ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து சிறிய பிரஷ் (பழைய டூத் பிரஷ்) கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் புதிது போல் மின்னலடிக்கும்.
தண்ணீரில் சிறிது பாலை விட்டு துடைத்தால் வெள்ளி நகை பளிச்சிடும். அதே போல் டூத் பேஸ்டால் கழுவினாலும் வெள்ளி நகை பளபளக்கும். சிறிதளவு புளியை கரைத்து சிறிது உப்பு, சிறிது சமையல் சோடா உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, இதில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்தால் நகை பளிச்சென பளபளக்கும்.
மழைக் காலத்தில் தீப்பெட்டிக்குள் நான்கைந்து அரிசி மணிகளைப் போட்டு வைத்தால் தீக்குச்சி உரசியவுடன் பற்றிக் கொள்ளும்.
குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) எலுமிச்சம் பழத்தின் தோலை வைத்திருந்தால் உள்ளே உள்ள நாற்றம் நீங்கி மணமாக இருக்கும்.
ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துத் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
Post a Comment