குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்.....Good Parenting !

பா லுக்கும் மனிதர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை பால் மனிதர்களின் வாழ்வில் ஒன்றியிருக்கிறது. தாய...

பாலுக்கும் மனிதர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை பால் மனிதர்களின் வாழ்வில் ஒன்றியிருக்கிறது. தாய்ப்பாலைவிட குழந்தைகள் அதிகம் பருகுவது பசும்பால்தான். குழந்தைக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம், விட்டமின் பி12 என ஏராளமான சத்துக்கள் பாலில் கிடைப்பதால், குழந்தையின் முதல் ஆறு மாதங்கள் பால் மட்டுமே முழு உணவுத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வோர் உணவாகக் குழந்தை உண்ணத் துவங்குகிறது. மற்ற உணவுகளோடு பாலும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இப்படி குழந்தையின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் பால், சரியான வழியில்தான் நமக்குக் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலில் நடக்கும் அரசியல் அதிர்ச்சிகரமானவை.

பாலில் யூரியா கலக்கப்படுகிறது. பசுக்களின் பால் சுரப்புக்காக மருந்துகள், ஊசிகள் போடப்படுகின்றன. ஆண்டிபயாடிக் மருந்துகள் பசுக்களுக்கு வாரி வாரிக் கொடுக்கப்படுகிறது. இப்படி எல்லாம் செய்து பசுவின் மடியிலிருந்து கரக்கப்படும் பாலை அருந்தும் மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகிறது என்ற சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, 'பசுவின் கரந்தப் பாலை அப்படியே கொடுக்கக் கூடாது. பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலைதான் கொடுக்க வேண்டும்' என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்? எந்த மாதிரியான பால் நல்லது என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார், மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர், செல்வ பிரமிளா.

‘பாலில் கால்சியம் உட்பட ஏராளமான சத்துகள் இருக்கிறது. மற்ற உணவுகளைவிட பாலைக் குடிக்கும்போது கால்சியம் சத்துகள் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட பால் நல்லது. தற்போது சின்தடிக் பால் என விற்பனைக்கு வருகிறது. ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்கிறார்கள். சின்தடிக் பால் வகைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. பதப்படுத்தப்பட்ட ஆவின் பால் நல்லது. சிறிய குழந்தைகள் சாதம் போன்ற உணவுகளைச் சாப்பிடத் துவங்குவதற்கு முன்னர், அழும்போது தேவைக்கேற்ப பால் வழங்கலாம். எந்த வயதுடைய குழந்தையாக இருந்தாலும், பாட்டிலில் பால் கொடுக்கக் கூடாது. பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுப்பதால், இன்பெக்க்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், ஸ்பூனில் கொடுக்க வேண்டும். கொஞ்சம் பெரியவர்களானதும் டம்ளரில் குடிக்கப் பழக்க வேண்டும்.

வளரிளம் பருவக் குழந்தைகளுக்குப் பால் மிகவும் அத்தியாவசியமான, அவசியமான உணவு. குழந்தைகள் உணவு உண்ணத் துவங்கிய பின்னர் காலையில் ஒரு டம்ளர், மாலையில் ஒரு டம்ளர் என 500 மி.லி அளவில் பால் வழங்கினால் போதும். பாலில் சுண்ணாம்புச் சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளது. பற்களின் ஆரோக்கியத்துக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பால் அவசியமான ஒன்று. எப்போதெல்லாம் எந்த அளவில் பாலைக் கொடுக்க வேண்டும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். சில பெற்றோர்கள், மற்ற உணவுகளை ஊட்டுவதற்குச் சோம்பல் பட்டு வளர்ந்த குழந்தைகளுக்குக்கூட பாலை ஊற்றிக் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவு தூக்கத்தில் குழந்தைகள் அழுதால்கூட, பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுத்துவிடுவார்கள். எதற்காக அழுகிறது, ஏன் அழுகிறது என்பதையெல்லாம் கவனிப்பது இல்லை. இதுவும் தவறு. தூக்கத்தில் பாலைக் கொடுப்பதால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று, வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்குப் பற்கள் விழுந்து முளைப்பதற்குள், சொத்தைகள் அரிக்கப்பட்டு இருக்கும். பற்களைச் சுத்தப்படுத்தாமல் பாலைக் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்குப் பற்களின் சுகாதாரம் அவசியம். தொடர்ந்து பால் அருந்திக்கொண்டே இருக்கும் குழந்தைகளால் கடினமான பொருட்களை கடித்து மெல்ல இயலாத நிலை ஏற்படும்.

காலையில் எழுந்ததும் பல் முளைத்த குழந்தைகள் பல் துலக்கிய பின்னரும், பல் முளைக்காத குழந்தைகளாக இருந்தால் வாய் கொப்பளித்த பின்னரும் ஒரு டம்ளர் பால் குடிப்பது சரியான வழிமுறை. பின்னர், பெரியவர்கள் போல அவர்களும் காலை உணவாக இட்லி, தோசை உட்கொள்ள வேண்டும். பல பெற்றோர்கள் இட்லி, தோசைக்கும் குழந்தைகளுக்கு பால் ஊற்றி, சர்க்கரை போட்டு சாப்பிட வைக்கின்றனர். ஒரு வயது முடியும்போதே சட்னி அல்லது சாம்பாரை தொட்டு சாப்பிடப் பழக்க வேண்டும். மாலை நேரத்தில் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம். இரவு பருப்பு சாதம் அல்லது பால் சாதம் அல்லது இட்லி என திட உணவாகக் கொடுத்தாலே போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் தூக்கத்தில் பால் கொடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’' என்கிறார் டாக்டர் செல்வ பிரமிளா.

Related

தாய் சேய் நலம்! 7170233686483598094

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item