பட்ஜெட் 2017-18: ரூ. 12,500 வருமான வரிச் சலுகை லாபமாக?
பட்ஜெட் 2017-18: ரூ. 12,500 வருமான வரிச் சலுகை லாபமாக? பட்ஜெட் 2017-18 -ல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமான வரி 5% ஆக க...
ரூ. 12,500 வருமான வரிச் சலுகை லாபமாக?
பட்ஜெட் 2017-18 -ல் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமான வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ. 2.5 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைக்கு ரூ. 25,000 வரி கட்டிய நிலையில் 2017-18ம் நிதி ஆண்டில் ரூ. 12,500 வரி கட்டினால் போதும்.
இந்த ரூ.12,500 வருமான வரிச் சேமிப்பு என்பது ரூ.5 லட்சத்துக்கு மேல் வரிக்கு உட்பட்ட வருமானம் கொண்ட அனைவருக்கும் கிடைக்கும்.
ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி 10%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருப்பது மூலம் கிடைக்கும் ரூ. 12,500 வரிச் சலுகை என்பது ரூ. 1,25,000-ஐ முதலீடு செய்து கிடைக்கும் தொகைக்கு இணையானது என்பதால், இது லாபகரமானது. அதாவது, செலவு செய்ய அதிக தொகை கிடைக்கும்.
Post a Comment