இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! ஹால்ட் அண்ட் ஹாப் புடிங் !
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர...

சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
ஹால்ட் அண்ட் ஹாப் புடிங்
தேவையானவை:
செய்முறை:
ஜெல்லி பாக்கெட்டின் பின்புறம் உள்ள செய்முறையைப் படித்து அதன்படி நன்றாகக் கலக்கி எடுக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில், சிறிதளவு ஜெல்லிக் கலவையை ஊற்றி, டம்ளர் சாய்ந்த நிலையில் இருக்கும்படி ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். பிறகு வெளியே எடுத்து அதன் மேல் சிறிதளவு பழக்கலவை சேர்த்து, மீண்டும் அதன் மீது ஜெல்லி கலவையை ஊற்றி, மீண்டும் டம்ளர் சாய்ந்த நிலையில் இருக்கும்படி ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும். கடல் பாசியுடன் தண்ணீர்விட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும். பாலைக் காய்ச்சவும். பால் கொதிக்கும்போது ஊறிய கடல் பாசியைச் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். இதனுடன் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை இறக்கி ஆறவிடவும். ஃப்ரீசரில் இருந்து டம்ளரை வெளியே எடுத்து செட் ஆன கலவை மேல் பால் கரைசலை ஊற்றவும். ஃப்ரிட்ஜில் வைத்து செட்டானதும் எடுத்துப் பரிமாறவும்.
Post a Comment