மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

சிவப்ரியா மாணிக்கவேல், உணவியல் ஆராய்ச்சியாளர் ``கீ ரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவு...

சிவப்ரியா மாணிக்கவேல், உணவியல் ஆராய்ச்சியாளர்
``கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் காலத்தில் இருந்து நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சமீப காலமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் கீரைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
ஊட்டச்சத்து மூலம் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில் ,குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட், பர்கர், பீட்சா எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

மைக்ரோ் கீரை என்றால் என்ன?

காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது. முளைகளும் மைக்ரோ கீரையும் ஒன்றல்ல. முளைகள் பொதுவாகச் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குல உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளர்க்கப்படுகிறது. முளை வளர்வதற்குச் சூரிய ஒளியும் மண்ணும் தேவையில்லை. ஆனால், மைக்ரோ கீரை மண்ணில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படுகின்றன. மைக்ரோ கீரைகளின் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும். இதுதவிர உண்ணும் உணவுக்கு மொறுமொறுப்பான (Crunchy) தன்மையைக் கொடுக்கிறது. கொத்தமல்லி, வெந்தயம், புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, கடுகுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை மற்றும் கோதுமைப்புல் ஆகியவை நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோ கீரைகள்.

மைக்ரோ கீரைகளின் நன்மைகள்

மைக்ரோ கீரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் என்சைம்களும் நிறைந்தவை. என்சைம்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செய்யப்பட்டவை. மைக்ரோ கீரைகளை என்சைம்களின் `ஸ்டோர் ஹவுஸ்’ என்று கூறலாம். செல்களின் சரியான வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் அபிவிருத்திக்கும் அத்தியாவசியமானவை.

மைக்ரோ கீரைகளில் நீண்டநாள் இளமையாக இருப்பதற்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடல் எடை இழக்க விரும்புபவர்கள், தினமும் தங்கள் உணவுப் பட்டியலில் , ஒரு சிறிய அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பிய மைக்ரோ கீரைகள், உண்பவரின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துவதோடு, சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுபவை. நோய் வருவதையும் தடுக்கும். இவற்றிலுள்ள புத்தம் புதிய குளோரோபில், சக்தி வாய்ந்த ரத்தச் சுத்திகரிப்பானாகச் செயல்படும்.

சிவப்பு முட்டைகோஸின் இளம் கீரைகளில் வைட்டமின் சி, கே மற்றும் இ நிறைந்துள்ளன. கொத்தமல்லியில் கண்களுக்கு நலம் புரியும் லுடீன் (Lutein) மற்றும் பீட்டா கரோட்டின் (Beta Carotene) மிகுதியாக உள்ளன. மேலும், புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், புற்றுநோய்ச் செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயக் கீரை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தவை. வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தச்சோகை சரியாக உதவுகிறது.

மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், சிவப்பு முட்டைகோஸ், கொத்தமல்லி மற்றும் முள்ளங்கி போன்ற மைக்ரோ கீரைகளில் முதிர்ந்த கீரைகளைவிட 40 மடங்கு அதிகளவு சத்துகள் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மைக்ரோ கீரை இரண்டு, மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால், அவை வளரும் மண்ணுக்குப் பூச்சிக்கொல்லிகளோ அல்லது களைக் கொல்லிகளோ பயன்படுத்தத் தேவையில்லை. இது ரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகளை உட்கொள்ள வழி செய்கிறது.

மைக்ரோ கீரைகளை நம் வீட்டில் வளர்ப்பது மகிழ்ச்சியைத் தரும் ஒரு பொழுதுபோக்கும்கூட. அதிக இடமோ நேரமோ, பணமோ இதற்குத் தேவையில்லை .

ஆரோக்கியமாக இருக்க, நீங்களும் உங்கள் இல்லங்களில் மைக்ரோ கீரைகளை வளர்க்க முயற்சி செய்யலாமே!

Related

மைக்ரோ கீரைகள் 8584384370361197428

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item