சைனஸ் முதல் ஆஸ்துமா வரை நுரையீரல் பிரச்னைகள் தீர்க்கும் எளிய வழிமுறைகள்!

இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்...

இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த சளியும் ஜலதோஷமும் இருக்கிறதே... அது வந்துவிட்டால், அதற்காக மாத்திரை சாப்பிட்டாலும்கூட ஒரு வாரம் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டுத்தான் நம்மைவிட்டு அகலும். சளித் தொந்தரவு வந்துவிட்டால், முழுமையாக வேலையில் கவனம் செலுத்தவோ, நிம்மதியாகத் தூங்கவோகூட முடியாது. ஆகவேதான் சளி என்றாலே பலருக்கும் அழற்சி, அருவருப்பு ஏற்படுவது இயல்பு. சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், சைனஸ், தூசி மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக சைனஸ், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கோடை, குளிர், மழைக்காலம் என எந்தப் பருவகாலமும் விதிவிலக்கு இல்லை.

 இது ஒருபக்கம் இருக்க, புகைப்பழக்கம், நகரமயமாக்கலால் காடுகள் அழிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் நுரையீரல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இயல்பாகவே அதிகரித்துவருகின்றன. இதுபோன்ற காரணங்களால் நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற கடுமையான நுரையீரல் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. எனவே, இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க நுரையீரலைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். ``நுரையீரலை அவ்வப்போது சுத்தம்செய்யும் வழிமுறையைப் பின்பற்றிவந்தால், நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் அவர்.நுரையீரல் நோய்களுக்கு மிகச் சிறந்த அருமருந்து துளசி. `துளசி வாசத்தை முகர்தல், அப்படியே சாப்பிடுவது அல்லது கஷாயமாக்கிக் குடித்தல் ஆகியவை காசநோய் உண்டாகாமல் தடுப்பதுடன் நுரையீரல் பாதிப்புகளையும் குறைக்கிறது’ என்கிறது ஆயுர்வேதம். இதனால்தான், கிராமங்களில் தொன்றுதொட்டு வீட்டிலேயே துளசி மாடம் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஒவ்வொரு கலாசாரத்தின் பின்னணியில் ஒரு மருத்துவம் இருக்கும் என்பது இதற்குப் பொருந்தும்.

  
கிராமங்களில் இன்றைக்கும் விறகு அடுப்பில் உணவு சமைக்கும் நடைமுறை உள்ளது. அப்படி, விறகு அடுப்பினால் சமைக்கும்போது வெளிப்படும் புகை, அதை சுவாசிப்பவர்களுக்குக் காசநோயை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதால்தான் வீட்டில் துளசி மாடங்கள், துளசிச் செடிகள் வளர்ப்பது தொடர்ந்துவருகிறது.

வாரத்தில் ஒருநாள் அகத்திக்கீரையை உணவில் சேர்த்து வருவதும், அன்றாட உணவில் சுண்டைக்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை சேர்த்துக்கொள்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

ஆப்பிள், கேரட், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக சாப்பிடுவது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ஏலக்காய் தண்ணீரில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்து சாப்பிடலாம். அன்னாசிப் பூவை தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து குடித்துவந்தால் நுரையீரல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.

தினசரி அதிகாலை வேளையில் மூச்சுப்பயிற்சி, தியானம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்விட்டு, சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் மூச்சுக்குழாயில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

பச்சைக் கற்பூரம், ஓமம், அன்னாசிப் பூ ஆகியவற்றை அரைத்து, அதை கர்ச்சீப்பின் ஒரு முனையில் வைத்து முடிந்துகொள்ள வேண்டும். அதை அடிக்கடி முகர்ந்து பார்த்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.

ராஸ்னாதி சூரணத்துடன் (ஆயுர்வேத மருந்துக்கடையில் கிடைக்கும்) நீர் சேர்த்து குழைத்துக்கொள்ளவும். அதை சுத்தமானத் துணியில் (கர்ச்சீப் அளவுள்ள) இருபுறமும் பூசி, நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்தத் துணியை வத்திபோலச் சுருட்டி, அதன் ஒரு முனையில் தீயைப் பற்றவைக்க வேண்டும். அதனை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு, மற்றொரு துவாரம் வழியாக அந்தப் புகையை உள்ளிழுக்கவும். இதேபோல மற்றொரு துவாரத்திலும் மாற்றிச் செய்யவும். இப்படி ஒவ்வொரு துவாரத்துக்கும் இரண்டு முறை வீதம் வாரத்துக்கு மூன்று முறை செய்ய வேண்டும். ராஸ்னாதி சூரணத்துக்குப் பதிலாக, மஞ்சள் பொடியையும் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பின்பற்றிவந்தால், ஆஸ்துமா, சைனஸ், நுரையீரல் அழற்சி, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் பிரச்னைகள் விரைவில் குணமாக உதவும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5252195959686799440

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item