தூதுவளை- நாட்டு மருந்துக் கடை - 20

நாட்டு மருந்துக் கடை - 20 ஊ ரெங்கும் மழைக்காலம். ‘மாமழை போற்றுதும்! மாம...

நாட்டு மருந்துக் கடை - 20
ரெங்கும் மழைக்காலம். ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என நாம் கொண்டாடினாலும், மழைக்காலக் கரிசனங்கள் கட்டாயம் தேவை. அதுவும், லேசாக ஜுரம் வந்தாலே ‘டெங்குவோ!’ என அள்ளிப் பதறி, ரத்தம் டெஸ்ட் செய்ய ஓடும் தற்போதைய சூழலில் மழைக்கால மெனக்கெடல், காலத்தின் கட்டாயம். இந்தத் தேடலில், ‘நாட்டு மருந்துக்கடை’யின் முதல் தேர்வு - தூதுவளை.
வல்லாரையை, ‘சீந்திலை அமிர்தவல்லி’ என்றும், ‘ஞானவல்லி’ என்றும் செல்லமாகச் சொன்ன சித்தமருத்துவம், தூதுவளையை ‘சிங்கவல்லி’ என கர்ஜிக்கிறது. பாமரருக்கு, சாதாரண சளி, இருமலுக்கு மட்டுமே பரிச்சயமான தூதுவளை சித்த மருத்துவருக்கு அதையும் தாண்டி மருத்துவப் பயன்கள் பல தருவது என்பதால், ‘கொடிகளின் ராஜா’ என  தூதுவளைக் கொடியைச் சொன்னார்கள். சிறு முட்கள் உள்ள இந்தக் கொடியை, மழைக்காலத்துச் சமையலில், ரசமாக வைத்துச் சாப்பிடுவது தமிழர் மரபு. அப்படிச் செய்கையில் கொடியின் முட்களை மட்டும் நீக்கிவிட்டு, கொஞ்சம் கொத்தமல்லி, சீரகம், புளி சேர்த்து ரசமாக்கிச் சாப்பிடுவர்.
​​​‘தூதுவேளையையுணத் தொக்கினிற் றொக்கிய​​​வேதையா நோயெலா மெய்யைவிட் டகலுமே’ என்கிறது தேரன் குணவாகடம் எனும் சித்த நூல்.இதன் பொருள், தூதுவளையை, கற்பமுறையாகவேனும், கறியாகவேனும் உட்கொண்டுவர, உடலில் கபத்தினால் ஏற்பட்ட நோய்கள் எல்லாமும் நீங்கும்.
தூதுவளையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவப் பயன் தரும். இலையினால் உண்டிக்குச் சுவையும் கிடைத்து, நெஞ்சின் சளியெல்லாம் கரையும். பூவும் மொத்த கீரையுமே ஆண்மையைப் பெருக்கும்; காய், வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களையும் நீக்கும். வேரும் கொடியும் இருமல், இரைப்பு முதலிய ஐயப்பிணிகளைப் போக்கும்.
​காயை வற்றலிட்டுப் பாகம் செய்து உண்டுவர, ஐய நோய், அழல் நோய், வளி நோய் முதலியன அணுகாது. குடல்வாதம் நீங்கும்.
குழந்தைகளுக்கு காதில் சீழ் வரும் நோய்க்கு, தூதுவளை ​இலையைப் பிழிந்து, காதில் துளியாக விட, நோய் நீங்கும். இலையைத் துவையல், குழம்பு முதலியன செய்து உண்ண, சளி வெளியேற மறுத்து, நெஞ்சை அடைத்து வரும் கோழைக்கட்டு நீங்கி இருமலை ஓடிப்போகச் செய்யும். ​இதனை நெய் சேர்த்துக் காய்ச்சி, ஐயநோய், இருமல் நோய்களுக்கு சித்த மருத்துவர் கொடுப்பார்.
​தைராய்டு கட்டிகள்
இதன் இலையை கஷாயமாக்கி அருந்திவந்தால், தைராய்டு கட்டிகள் பாதிப்பு மறைந்து, தைராய்டு சீர்படும் எனச் சொல்லப்படும் கருத்துகள் ஆய்வுக்கு உரியவை.
தூதுவளை இலையைச் சேகரித்து, சுத்தம் செய்து, 15 முதல் 50 கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து, ரொட்டியாகத் தயாரித்து, காலை உணவாக, கப நோய்க்கும் தொண்டை நோய்க்கும் சாப்பிடச் சொல்கிறது சித்த மருத்துவம்.
‘20 கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து, வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டுவந்தால், நோய்த் தடுப்பாகவும், நினைவாற்றல் பெருகவும் செய்யும்’ என்கின்றன சில அனுபவக் குறிப்புகள். மேலும், வாயுப் பிரச்னையைப் போக்கும்.  உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டுவந்தால், உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மைசக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.
​​​தூதுவளையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். அதனால், தூதுவளைக் கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்து, நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டுவர வேண்டும்.
மூலிகை என்றாலே, எங்கோ எளிதில் ஏற முடியாத மலையில் வளரும் என்ற தவறான நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், மிக எளிதாக வளரும் இந்தக் கீரையை வீட்டுத் தோட்டத்தில், மாடித்தோட்டத்தில்கூட வளர்க்க முடியும். தூதுவளை போன்ற அரிய குணம் உடைய மூலிகைகள் பல நம் நாட்டு மருந்துக்கூட்டத்தில் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தூதுவளை வெறும் கொடி மட்டும் அல்ல. அது, நம் ஆரோக்கியத்தின் தூதுவன்.
- தொடரும்
தூதுவளைக் குடிநீர்
தூதுவளை, இம்பூறல், ஆடாதொடை, சங்கன் வேர், சுக்கு, வீழி, திப்பிலி, பர்படாகம், வழுதுனை வேர்,  கண்டக்காலி ஆகியவற்றை, தலா 30 கிராம் எடுத்துச் சேர்த்து, ஆறு லிட்டர் நீர் விட்டு, அதை எட்டில் ஒரு பாகமாகக் குறுக்கி, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள, சளியுடன் கூடிய காய்ச்சல் போகும்.
இதில் உள்ள ஒவ்வொரு மூலிகையும், நவீன மருந்துவ ஆய்வுகளில் நுரையீரலைத் தாக்கும் கிருமிகளுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக்காகவும், கோழை அல்லது சளி நீக்கியாகவும் (Mucolytic), நுரையீரல் குழாய் சுருக்கம் நீக்கியாகவும் (Bronchodilation), எக்ஸ்பெக்டோரன்டாகவும் (Expectorant)  செயல்படுகிறது.

Related

மூலிகைகள் கீரைகள் 8856842519080909292

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item