திரிபலா பானம்!மூலிகை இல்லம்!!
மூலிகை இல்லம் - 11 க டுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண...
திரிபலா பானம்!
தேவையானவை: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (பொடி) - தலா 5 கிராம், பனை வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை: 150 மி.லி தண்ணீரில், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்ப் பொடிகளைப் போட்டு, பனை வெல்லம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். தூங்கச் செல்லும் முன், இந்த பானத்தை வடிகட்டி, இளஞ்சூடாக அருந்திவர வேண்டும்.
நோய்களின் வாசலாக இருப்பது மலச்சிக்கல். இந்த பானத்தைத் தினமும் குடித்துவர, மலக்குடல் சுத்தமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.
மலச்சிக்கல் பிரச்னை விலகினாலே, நோய்கள் நம்மை நெருங்காது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
உடல் முழுவதும் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
வாயுப் பிரச்னைகள், வாயுவால் ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் வராமல் தடுக்கப்படும்.
செரிமான மண்டல உறுப்புக்களைப் பாதுகாக்கும்.
கல்லீரலைச் சுத்தம் செய்யும். கெட்ட கொழுப்பை நீக்கும்.
ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதயம் சிறப்பாகச் செயல்பட உதவும்.
சிறுநீர்த் தொற்று, சுவாசக்குழாயில் அடைத்திருக்கும் சளி போன்ற பிரச்னைகள் குணமாகும்.
மலக்குடலுக்கு ஏற்ற உணவுகள்
மலக்குடலுக்கு ஏற்ற உணவுகள்... வாழை, அவரைக்காய், வெண்டைக்காய், பிளாக்ஸ் விதைகள், பீன்ஸ், வெந்தயம், நீர்மோர், திராட்சை, அத்தி, வெந்நீர்.
Post a Comment