நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்கிறேன். அதனால், அடிக்கடி குதி்காலில் வலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?” கன்சல்ட்டிங் ரூம்!
சரவணன், திருச்சி. “நான் மளிகைக் கடை வைத்திருக்கிறேன். நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்கிறேன். அதனால், அடிக்கடி குதி்காலில் வலி ஏற்படுகிறது...
“நம் உடல் எடையைத் தாங்கும் முக்கிய மூன்று எலும்புகளில் ஒன்று, பின் பாதத்தில் அமைந்துள்ளது. சிலர் வேலை காரணமாக தொடர்ந்து நீண்ட நேரம் நிற்கவேண்டியோ அல்லது நடக்கவேண்டியோ இருக்கிறது. இதனால், இந்த எலும்பில் ஏற்படும் பளு காரணமாக வலி ஏற்படுகிறது.
குதி்கால் எலும்பு அதிக எடையைத் தாங்க நேரும்போது, மூட்டுகளைச் சுற்றி இருக்கும் சவ்வு அதிக வேலையைச் செய்ய நேரிடுவதாலும் பாத வலி வரலாம். நேரம் கிடைக்கும்போது அமர்ந்தோம் என்றால், வலியைக் குறைக்கலாம். சிலர், ‘எங்களுக்கு உட்கார வாய்ப்பு கிடைக்காது’ என பதில் சொல்வார்கள். அவர்கள் அணியும் செருப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றலாம். மேலும்,
‘எம்.சி.ஆர்’ எனப்படும் மைக்ரோ செல்லுலார் ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதன் மூலமும் இந்தப் பிரச்னையை ஓரளவுக்குத் தவிர்க்கலாம்.
கால்களை நீட்டி, கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு, அவற்றை விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்ற பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் குதிகால் வலியைத் தவிர்க்கலாம்.”
Post a Comment