கன்சல்ட்டிங் ரூம் ஜி.பிரேமா, சென்னை. “நான் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். என் ம...
கன்சல்ட்டிங் ரூம்
ஜி.பிரேமா, சென்னை.
“நான் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். என்
முகத்தில் ரோமங்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால், என்னுடன் வேலை
செய்பவர்கள் என்னைக் கேலி செய்கின்றனர். முகத்தில் இப்படி அதிக ரோமங்கள்
வளர என்ன காரணம்? முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற வழிகள் உண்டா?”
டாக்டர் இரா.மனோன்மணி,தோல் மருத்துவ நிபுணர், திருச்செங்கோடு.
“பெண்களுக்கான முக அழகைக் கெடுப்பதில் தேவையற்று வளரும் இந்த ரோமங்கள்
முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கு, ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும்
கோளாறுகளால், இவ்வாறு தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கின்றன. இதற்குத்
தீர்வு உண்டு. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் டெஸ்ட் செய்து லேசர் ட்ரீட்மென்ட்
மூலம் இந்த முடிகளை நீக்கலாம்.
இப்போது, கடைகளில் கிடைக்கும் ஹேர் ரிமூவிங் க்ரீம்கள், லோஷன்
போன்றவற்றால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு, ஆண்களைப்போல முகத்தில் மீசை இருந்து மஞ்சள் தடவியும் பலன்
இல்லை எனில், ஒவ்வொரு முடியாக த்ரெடிங் செய்துகொள்ளலாம். ப்ளீச் செய்வதால்
ரோமத்தின் நிறத்தைத் தோலின் நிறத்துக்குக்கொண்டு வரலாம். இதனால், முகத்தைப்
பார்த்ததும் முடிகள் இருப்பது பளிச்சென தெரியாது. ஆனால், ப்ளீச் செய்வதன்
மூலம் முடிகள் உதிராது.
உதட்டின் மேல்பகுதியிலும், தாடைப்பகுதியிலும் இருக்கும் முடிகளை நீக்க,
வாக்சிங் செய்வது நல்லது அல்ல. க்ரீம்கள் சருமத்தின் அடிப்பகுதி வரை
பரவுவதால், சரும நிறம் காலப்போக்கில் மாறி சுருக்கங்கள் விழலாம்.
இயற்கைமுறையில் தீர்வு வேண்டும் என்றால், ஹார்மோன் குறைபாட்டைச்
சரிசெய்வதுடன், கஸ்தூரி மஞ்சளோடு பாலாடை கலந்து முகத்தில் தடவிவர, தேவையற்ற
முடிகள் மெள்ள மெள்ள குறையும். மஞ்சளுடன் பப்பாளிக்காயையும் கலந்து
பயன்படுத்தலாம். இதனால், முடிகள் மறைவதோடு முகமும் பொலிவு பெறும்.
பசும்பாலுடன் பாசிப்பயறு தோலையும், எலுமிச்சைச் சாற்றையும் கலந்து
முகத்தில் தடவிவர, நல்ல பலன் உண்டு. மேலும், முட்டையின் வெள்ளைப்
பகுதியுடன் சர்க்கரை, சோள மாவைக் கலந்து பசைபோல் ஆனதும், முகத்தில் தடவி,
காய்ந்தவுடன் அதனை நீக்கினால் முடிகள் நீங்கும்.”
Post a Comment