சமையல் குறிப்புகள்! புளியோதரை செய்து சுவைப்போமா!
புளியோதரை செய்து சுவைப்போமா! தேவையான பொருட்கள் பச்சரிசி சாதம் - 1 கப் நல்லெண்ணை - 12 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1/...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_16.html
புளியோதரை செய்து சுவைப்போமா!
தேவையான பொருட்கள்
பச்சரிசி சாதம் - 1 கப்
நல்லெண்ணை - 12 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
புளி - பெரிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
* அடிகனமான வாணலியில் நல்லெண்ணை ஊற்றி காய வைத்து வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* பிறகு எண்ணையில் கடுகு பொரிக்கவிட்டு, கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய் வற்றல், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், தனியாத்தூள், வெந்தயம் போட்டு வதக்கவும்.
* ஒரு கப் நீரில் கரைத்த புளி விழுதை வடிகட்டி ஊற்றி, உப்பு போட்டு கெட்டியாக கொதிக்க விடவும்
* கொதித்த புளிக்கரைசலை உதிரி உதிரியாக வடித்த பச்சரிசி, சாதத்தில் போட்டு குழையாமல் மெல்ல கலந்து கறிவேப்பிலை, வேர்க்கடலை தூவி பரிமாறவும்.
* கமகம புளியோதரை தயார்.
*************************************************************************
Post a Comment