கேள்விக்கு பதில் அளிப்பவர் டாக்டர் ப.உ. லெனின். திகட்டாத திருப்தி எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனக்கு போதுமான அளவிற்கு விர...

கேள்விக்கு பதில் அளிப்பவர் டாக்டர் ப.உ. லெனின்.
திகட்டாத திருப்தி
எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனக்கு போதுமான அளவிற்கு விரைப்புத்தன்மை இல்லை. விந்தும் உடனே வெளியேறி எல்லாவற்றையும் வீணாக்கிவிடுகிறது. வீணடித்து விரையம் செய்வதில் எனக்கு நிகர் நானாகவே இருக்கிறேன். எனக்குப் போதுமான திருப்தி என்பதே ஆரம்பம் முதல் முடிவு வரை இல்லை. என் நண்பர்களைக் கேட்டால் விதவிதமாகச் சொல்கிறார்கள். இது கற்பனையா? அல்லது உண்மையா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. புத்தகங்கள் / படங்கள் பார்க்கிறேன். எது நிழல், எது நிஜம் என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சனையால் எனக்கு எதிலும் ஈடுபாடு இல்லை. ஆர்வமில்லை. சோர்வு இருக்கிறது. சோகம் சொந்தமாகிப் போய்விட்டது. பாலியல் / மனநல நிபுணர்கள் சொல்லும் தீர்வுகள் எனக்கு உதவவில்லை. தாங்கள்தான் நல்ல தீர்வாக எனக்குச் சொல்லவேண்டும்.
திகட்டுகின்றவரை தித்திப்பைத் திருத்தமாக அனுபவித்து, அதில் ஆழ்ந்து விடவேண்டும் என்கிறீர்கள். ஆனால் சில திருப்திகள் சில, பல காரணங்களால் திகட்டாது. தங்களுக்கு ERECTILE DYSFUNCTION / PREMATURE EJACULATION இருக்கிறது. இதனை ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்தமுடியும். ஹோமியோ நிபுணரிடம் மனம் விட்டுப் பேசினால், திகட்டுகின்ற திருப்தியைப் பெறலாம். SELENIUM, ZINC.MET, PLUMBUM. MET, USTILAGO, BUFORANA, AGNUS போன்ற மருந்துகள் உள்ளன. இவற்றை முறையான ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.
---------------------------------------------------------------------------------------------
புகைக்கும் புகை
என் வயது நாற்பத்தாறு, இரத்தக் கொதிப்புக்குத் தொடர்ந்து ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். எனக்கு CHAIN SMOKER என்ற பெயரே உண்டு. ஒரு நாளைக்கு மூன்று முழு பாக்கெட்டுகளை ஊதித்தள்ளிவிடுவேன். இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முயன்றால், வெறியில் இன்னும் அதிகமாகத்தான் ஆகிறது. இதனால் இரத்தக்கொதிப்பு அதிகமாவதாக மருத்துவர் சொல்கிறார். என் காலில் VARICOSE VEINS பிரச்சனையும் உள்ளது. இதற்கு COLOUR DOPPLER SCAN செய்து பார்த்தோம். இரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறது என்கிறார் VASCULAR SURGEON. . புகையால்தான் நான் புதைகுழிக்குப் போவேன் என்று நினைக்கிறேன். என் பழக்கங்களை / அடிமைத்தனத்தை அடியோடு விட மருந்துகள் உள்ளனவா?
புகைக்கும் புகை உங்களைப் புதை குழியில் தள்ளிவிடும். தாங்களே தலையில் மண்ணை வாரிபோட்டுக் கொள்ளவேண்டாம். புகைத்தால் நுரையீரல் புற்றுவரும். இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனால் இரத்த நாள சம்பந்தப்பட்ட நோய்கள் இதயத்தை தாக்கி, மாரடைப்பை ஏற்படுத்தும். ‘வேரிகோஸ் லெயின்ஸ்’ என்கிற பிரச்சனையும் புகைப்பவர்களுக்குக் கடுமையான பிரச்சனையை உண்டாக்கும். தங்களின் முழு ரிப்போர்ட்டுகளின்படியும் / தாங்கள் புகையை வெறுக்கவும் Tabacum 200, Coffeacruda 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, இரவு என்று இரண்டு வேளைக்கு இருபது நாட்கள் சாப்பிடுங்கள்.
----------------------------------------------------------------------------
இயலாமை இருக்கிறதே!
என் வயது இருபத்தெட்டு. இரண்டு குழந்தைகளுமே சிசேரியன்தான். சிசேரியன் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு, சீரழிந்துகொண்டு இருக்கிறேன். என்னால் இப்போது இயல்பாக, குனிந்து நிமிர முடியவில்லை. முதுகு, இடுப்பு, அடிவயிறு, தொடை, விலா எலும்புப்பகுதிகள் அதிகமாக வலிக்கிறது. இது சிசேரியன் ஆபத்துதான் என்கிறார்கள் நிபுணர்கள். என்னால் சிறப்பாக ஒன்றுமே செய்யமுடியவில்லை. இரண்டு சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மருத்துவக் குறிப்புகள் முதலிய எல்லாவற்றையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். இயலாமையில் இருண்டது என் உலகம்.
சிசேரியன் சிக்கல்களைச் சீர்படுத்தமுடியும். தாங்கள் உடற்பருமனைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும். குண்டானதால் உண்டான சிசேரியனின் வினை இது. வினை இருந்தால் விடிவு இருக்கத்தானே செய்யும். அனைத்து வினாக்களுக்கும் உடனடி விடையாக தாங்கள் Calcareacarb 200, Sabina 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிடுங்கள். இயலாமைகள் இனி இருக்காது. இருக்கவும் முடியாது. முயலுங்கள் முடியும் எல்லாம்.
--------------------------------------------------------------------
ஆபத்தாகுமா அரிப்பு?
எனக்கு அங்கமெல்லாம் அரிப்பு. சொறிகின்ற இடமெல்லாம் சிவப்பு. பட்டை, பட்டையாகக் கையில் போட்டுக்கொண்டு பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. அரிக்கிறது. சிவக்கிறது. சிவக்கிறது, அரிக்கிறது. இரு ஒரு தொடர்வினையாக எனக்கு எரிச்சலைக் கிளப்புகிறது. இதனை Chronic Urticaria என்றுதான் சொல்கிறார் நிபுணர். Atarax, Cetzine, Avil போன்ற மாத்திரைகள் உதவவில்லை. இரத்தத்தைச் சுத்தப்படுத்த சித்த மருந்துகளையும் சாப்பிட்டுப் பார்த்தேன். சிறப்பாக இருக்கவில்லை. என் தோலை பெருந்தொல்லையாக நான் நினைக்க வேண்டியுள்ளது. என் இரத்தப் பரிசோதனைகள், சாப்பிட்ட மருந்துகளின் சீட்டுகளை இணைத்துள்ளேன். எனக்கு உரிய ஆலோசனை வழங்குங்கள். எனக்கு ஆங்கிலத்தில் ஆர்வமில்லை.
இந்த வகையான அரிப்புகள் ஆபத்தானது. இதனால் தோல் புற்றுநோய் எல்லாம் வர சாத்தியமே இல்லை. தாங்கள் Croton tig 200, Sepia 200 ஆகிய இரண்டு மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மூன்று வாரங்கள் சுவைத்து சாப்பிடுங்கள். மேற்கொண்டும் தாங்கள் மருந்துகளைச் சாப்பிடவேண்டும் என்பதால், திறமையான ஹோமியோபதி நிபுணரை அணுகுங்கள். ஆங்கில மருந்துகள் வேண்டாம்.
------------------------------------------------------------------------------
வாலிப வருத்தம்
என் வாலிபம் வாடிப்போய்க் கிடக்கிறது. விரைப்புத்தன்மை அறவே இல்லை. ஆண்மையின் ஆட்டங்கள் அடங்கி, ஒடுங்கிப்போய் உள்ளன. சிறுத்தும், சில்லிட்டும் கிடக்கிறது என் ஆண்மை. தூண்டல்கள், துலங்கல்கள் இல்லை. துவண்டுபோய்க் கிடக்கிறது அனைத்து சமாச்சாரங்களும். நாள் விடிகிறதே ஒழிய என் பிரச்சனைகளுக்கு ஒரு விடிவே இல்லாமல்தான் இருக்கிறது. விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் விடிய விடிய. என் வாலிபம் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாலியல் நிபுணர் / மனநல நிபுணர் என்று எல்லோரையும் பார்த்தாகிவிட்டது. பலன்தான் இல்லை. என் மருந்துச் சீட்டுகள் அனைத்தையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். விடிய ஏதேனும் ஒரு வழி உண்டா?
பாலியல் பரிதாபங்கள் இவை. வாலிபமே இனி வா... வா... என்று பாடி, ஆடி மகிழலாம் தாங்கள். வருத்தம் வேண்டாம். வாலிபத்தில் ஒரு வம்பும் வேண்டாம். தங்களிடம் மனப்பகுப்பாய்வு செய்து நிறைய மருந்துகளைக் கொடுத்தால், குணமாவது நிச்சயம். Ustilago, Onosmodium, Ashwagandha, Lycopodium, Bufo, Agnus போன்ற மருந்துகள் உள்ளன. இவற்றை முறையான ஆலோசனையின் பேரில் தொடர்ந்து சாப்பிட்டால், வருத்தங்கள் வராது. தாங்கள் உடன் ஹோமியோபதி நிபுணரை அணுகுங்கள். மனநலமே உடல்நலம். வாலிபத்திற்கு வளம் தரும்.
--------------------------------------------------------------------------
இன்னல் தரும் இடுப்பு
எனக்கு வயது முப்பத்தெட்டு. திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கு மிகவும் கடுமையான / கொடுமையான தாங்கமுடியாத இடுப்பு வலி. இன்னல் தந்தால் இடுப்பை மாற்று என்கிறார் நிபுணர். என்னால் அதற்குமேல் ஒன்றும் பேசவே முடியவில்லை. என் விதியை நொந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். விதி என் மீது விளையாடிக் கொண்டிருக்கிறது. சதியும், விதியும் ஒரு விளையாட்டு வீரனை என்ன பாடுபடுத்துகிறது என்பதற்கு என் இடுப்பே இன்றளவும் சாட்சி. விஸிமி, எக்ஸ்ரே என்று Êஏகப்பட்ட டெஸ்ட்டுகள் என்று, எல்லாவற்றையும் எடுத்துவிட்டேன். ரிப்போர்ட்டுகளை இணைத்துள்ளேன். மருந்துகளை எனக்கும் எழுதுவீர்கள்தானே?
இன்னல் தரும் இடுப்பு இனி இனிமையாகும். தாங்கள் Aesculus 200, Arnica IM ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் பதினைந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். பயோகெமிக் மருந்துகளும், பயோகெமிக் கூட்டுக்கலவை மருந்துகளும், சில வகை மருந்துகளின் தாய் திரவங்களும் இடுப்பை இலகுவாக்கும். ரிப்போர்ட்டுகளின்படி தங்களுக்கு மிகப் பெரிய பிரச்சனைகள் என்று ஒரு பிரச்சனையும் இல்லை. கவலைப்பட வேண்டாம். கையில் எடுங்கள் ஹோமியோபதி மருந்துகளை.
--------------------------------------------------------
குறைகளைக் குறைக்க...
எனக்குக் கட்டுக்கடங்காத ஆஸ்துமாவும், அல்லல்படுத்தும் அல்சரும், சர்க்கரை வியாதியும் பத்து வருடங்களாகவே இருந்து வருகின்றன. என் உடம்பில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எஜமானர்கள் இவைகள். மருந்துகளைச் சாப்பிட்டு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற போதிலும், இவை சமயங்களில் கட்டுக்கடங்காமலேயே திரிகின்றன. இவற்றை எல்லாம் முழுமையாகக் குணப்படுத்தமுடியும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. Êஏதோ இவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பித்து சில காலங்கள் நிம்மதியாக இருப்போம் என்றுதான் நினைக்கிறேன். எனக்கு உடம்பு, வயிறு எரிச்சல், கடும் இழுப்பு, சுவாசம் நாசமாகியிருக்கிறது.
தங்களின் நீண்ட நாளைய நோய் எஜமானர்களை ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும், குறைகளையாவது குறைக்கமுடியும். நோய்களின் பக்கம் மற்றும் பாதகமான விளைவுகளைத் தடுக்கமுடியும். குடியிருக்கும் கோயிலாக உடம்பை மாற்றிவிட்டன உங்களின் குறைகள். சுவாசத்தை சுவாரசியப்படுத்தமுடியும். எரிச்சல்களை எள்ளி நகையாடமுடியும். தாங்கள் Aspidosperma 6x, Aralia 6x ஆகிய இரண்டு மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் 5 மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் இரண்டு வாரங்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். மேற்கொண்டும் தாங்கள் தொடர்ந்து மருந்துகளை சாப்பிட ஆலோசனை அவசியம்.
----------------------------------------------------------------
மகிழ்வித்து மகிழ...
எங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகப்போகின்றன. மழலை இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு உடலுறவுத் திருப்தி என்பதும் அறவே இல்லை. என் கணவரால் என் பசிக்கு ஈடுகொடுக்கவே முடியவில்லை. ஏதோ வாழ்க்கை அதன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வசந்தம் இல்லை. வருத்தங்கள் உண்டு. நானும் என் கணவரை மகிழ்வித்து வாழலாம் என்றால், வாயில்களே இல்லை. குழந்தை இல்லாக் குறை வேறு என் மனதைக் குடைந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. எனக்கு வாழ்க்கையில் சோகங்களே செந்தமாகிப் போனது. சொந்த பந்தங்கள் உதவவில்லை. என் வயிற்று ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் என் கணவரின் ரிப்போர்ட்டுகளை இணைத்துள்ளேன். பதில் சொல்லுங்களேன்.
மகிழ்வித்து இருவரும் மகிழ முடியவில்லையே என்கின்ற மகாக்குறை உங்களுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். தங்களுக்கு Bulky Uterus / Pcod அதாவது பெரிய கருப்பையும், சினைப்பை கட்டிகளும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கணவருக்கு உயிரணுக்களான, எண்ணிக்கை, அளவு, தன்மை சரிவர இல்லை. இதனை மருத்துவத்தில் Oligospermiaஎன்பார்கள். மழலை இல்லை / குறைகள் உண்டு என்றால், அதற்கு ஹோமியோபதியில் மருந்துகளும் உண்டு. தாங்கள் Selenium, Cocculus, VIB.Opulus, Xanthoxyllum, Yohimbinum, Damiana, Tribuluster, போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம். குழந்தை பெறலாம்.
Post a Comment