பல் வலிக்கு இயற்கையான தீர்வு.

பல் வலிக்கு இயற்கையான தீர்வு. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறை...

பல் வலிக்கு இயற்கையான தீர்வு. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம். பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும். எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள். பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும். ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும். இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது. ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும். ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும். எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம். ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும். கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலிகள் தீரும். சித்தரத்தை, காவிக்கல், படிகாரம், ஆலம்பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து, அதில் பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1302815519500067862

Post a Comment

2 comments

Saha, Chennai said...

எனக்கு இப்போது மிகவும் தேவையான பதிவு.
நன்றி.

MohamedAli said...

நன்றி நண்பா நன்றி! தொடாந்து படித்து பயன்பெறுங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் வலைத்தளம் பற்றி தகவல் கூறவும்.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item