கருவேப்பிலை பொடி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

‘‘ஒவ்வொரு உணவிலேயும் ஒரு விதமான மருத்துவ குணம் நிரம்பியிருக்கு. இதுல (சர்க்கரை வியாதி, உடல்பருமன், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, மற்றும் உடல...

‘‘ஒவ்வொரு உணவிலேயும் ஒரு விதமான மருத்துவ குணம் நிரம்பியிருக்கு. இதுல (சர்க்கரை வியாதி, உடல்பருமன், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, மற்றும் உடலுக்கு வலுவூட்டக்கூடிய உணவுப்பொருள்கள், அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும், உபயோகப்படுத்தும் உணவுப் பொருட்கள் என...) ரெண்டுவிதமான உணவுப் பொருட்களை தயார்பன்றேங்க. ‘‘எளைச்சவனுக்கு என்று கொடுங்க... கொழுத்தவனுக்கு கொள்ளுக் கொடுங்க’’ன்னு ஏதோ அடுக்கு மொழிக்காக சொல்லலீங்க... அது முழுக்க முழுக்க உண்மை. நார்ச்சத்து நிறைந்த ‘கொள்ளு’ சாப்பிட்டா உடம்பில் உள்ள கொழுப்புக்கு ‘குட்பை’ சொல்லிட்டு ஐம்பது கிலோ தாஜ்மஹாலை ஜொலிக்கலாம். கருவேப்பிலை பொடியை ‘மைக்ரோ ஓவனில்’ வைத்து உலர்த்தி பொடி செய்தால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும். எனவே கருவேப்பிலையை பொடியாக்கி மோரிலோ, சாதத்திலோ, கலந்தும் இட்லி, தோசையிலோ தொட்டுக் கொண்டோ சாப்பிட்டால் சுவைக்கு சுவை; ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியம். இந்த பொடியில் ‘குளோரஃபில்’ சத்து அடங்கியிருப்பதால் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மட்டுமில்லாம, கண்பார்வையும் பிரகாசமா ஆகிடும். அதே மாதிரி வெந்தயத்தை அழைச்சுப் பக்குவப்படுத்தி சின்ன சைஸ்ல உருண்டை செஞ்சு -தனமும் கவலையில் வெறும் வயித்துல சாப்பிட்டு வந்தாப் போதும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்ல மருந்து. சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்க்கரை வியாதிக்காரர்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். பாகற்காய் என்றாலே பலர் பலமயில் தூரம் ஓடுவாங்க. ஆனா அந்தப் பாகற்காயை நல்லா பொடி ஆக்கி கருவேப்பிலை, பெருங்காயம், புளி, உப்பு’ன்னு சரியான அளவு கலந்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் பாகற்காய்ன்னா ஓடி வருவீங்க. அதேமாதிரி சோயாவை கலந்தாலே கசக்கும்னு பலர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா சோயாவை பருப்புப் பொடியில கலந்து சாப்பிட்டா ரொம்ப ருசியாவும், இருக்கும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். இது குழந்தைகள் சாப்பிட்டால் உடலில் எலும்பும் தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும். அதே மாதிரி எல்லாரும் இட்லி பொடியை தயார் பண்ணும்போது அகல கலக்குற உளுந்தைத் தோல் நீக்கி அரைக்கிறாங்க. அப்படியில்லாம தோலோடு சேர்த்து அரைக்கணும். ஏன்னா தோலில்தான் புரோட்டின் மற்றும் நார்ச்சத்து அடங்கியிருக்கு. திணை, கோதுமையுடன் கூடிய உளுந்து, பயிறு, கடலைப் பருப்பு எல்லாத்தையும் கலந்து கஞ்சி வெச்சு ‘பசி வயித்தை கிள்ளுதப்பா’ன்னு யஅகோரப்பசியில இருக்கிறவங்க இந்தக் கஞ்சியை சாப்பிட்டாப்போதும். பசி பட்டுனு' பறந்துடும். சர்க்கரை வியாதிக்காரர்கள் அரிசிக்கு பதிலா கோதுமையை சாப்பிடுறதை விட இந்தக் கஞ்சியை சாப்பிட்டா ருசியாவும் செரிமானமும் சரியாக இருக்கும். எடை அதிகமாகாது. அதைவிட நான் தற்போது தயாரித்த ‘நைன் இன் நைன் ஃபுட்’ உணவுப் பொருளுக்கு ஏகோபித்த வரவேற்புங்க’’ என்றவரை வழிமறித்து, அதென்ன நைன் இன் நைன் ஃபுட்? என்றோம். ‘பதப்படுத்தப்பட்ட கோதுமை, பாதாம் பருப்பு, பொட்டுக்கடலை, முந்திரி, சோளம் ஆகியவற்றை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டது. இதை ஒன்பது விதமா தயார் பண்ணி சாப்பிடலாம். இதிலுள்ள சுவையையும் சத்தையும் சொல்லத் தேவையில்லை. திடீர் விருந்தாளி வந்துட்டா சூடான பாலில் ஹார்லிக்ஸ், விவாய மாதிரி இதை கலந்து கொடுத்து அசத்தலாம். ‘சூப்’ சாப்பிடுறவங்க அதில் இதை கலந்து கலந்து சாப்பிட்டால் ‘சூப்பரா இருக்கும்னு’ கொள்ளுங்க. காய்கறிகளோட சேர்த்து சமைக்கிறதுக்கும், உடனடி ‘சட்னி’ தயார் பன்றதுக்கும் பயன்படுத்திக்கலாம். வெட்டின வெங்காயம் பச்சைமிளகாய், கொத்தமல்லி கலந்து சமோசா செய்வதற்கும், அப்படியே சுக்குமல்லி காஃபி, பழச்சாறு போன்றவைகளையும் தயார் செய்யலாம். சாதாரணமா சுக்கு காஃபின்னு எடுத்துக்கிட்டா பதினைஞ்சு விதமான பொருட்களை கலந்து சுக்குவோட உண்மையான மருத்துவ குணத்தையே குறைச்சுடுவாங்க. ஆனால் வெறும் சுக்கு, மல்லி இரண்டையும் அறைச்சு பின்பு சுக்கு மல்லி காஃபியை குடிச்சா எப்பேர்பட்ட சளியா இருந்தாலும் அரண்டு மிரண்டு ஓடும். பசியின்மை, வயிறு உப்புசம், தலைவலி போன்ற எந்த பிரச்னையும் தலைகாட்டாது. அடுத்த ஜீர்ணா, வரைவு உணவகத்துல சாப்பிட்டு வயிறு கோளாறில பாதிக்கப்பட்டவங்க, பசியின்மை உள்ளவங்க, சுக்கு, மிளகு, திப்பிலி நார்த்தங்காய்னு கலந்து தயாரிச்சு சாப்பிடுற இந்த ‘ஜீர்ண’ வயிற்றுக் கோளாறுகளை விரட்டி அடிக்கலாம். புதினாவை பொடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம். ஜீரண சக்தியை அதிகரித்து, பசி அற்றவர்களுக்கு பசியைத் தூண்டும். இதை சாதத்திலோ மோரிலோ கலந்து சாப்பிடலாம். இப்படி ஏகப்பட்ட உணவுப் பொருட்களில் ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள், இருக்க, நாமே ஏன் கண்டதை சாப்பிட்டு மருந்து மாத்திரைகளை தேடி ஓடனும்’’

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8764390435546520956

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item