சமையல் குறிப்புகள்! மட்டன் சாப்ஸ்
மட்டன் சாப்ஸ் தேவையான பொருட்கள் சாப்ஸ் மட்டன் - 1/2 கிலோ வெங்காயம், தக்காளி - 200 கிராம் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_3895.html
மட்டன் சாப்ஸ்
தேவையான பொருட்கள்
சாப்ஸ் மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - ஒரு குழிக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.
* தேங்காய், சோம்பு அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், தனியாத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டனையும் சேர்க்கவும்.
* அரைத்த தேங்காயை ஊற்றிக் கிளறி, சாப்ஸ் நன்கு சுண்ட விடவும்.
* இப்போது பொடித்த சீரகம், மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
****************************************************************
Post a Comment