முருங்கைக் கீரை புட்டு சூப்பர் காம்பினேஷன்-.சமையல் குறிப்புகள்
முருங்கைக் கீரை புட்டு தேவையான பொருட்கள் : முருங்கை கீரை - 1 கட்டு பெரிய வெங்காயம் - 1 துவரம் பருப்பு - 1 ஆழாக்கு மிளகாய் வத்தல் - 10 இஞ்சி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_24.html
முருங்கைக் கீரை புட்டு
தேவையான பொருட்கள் :
முருங்கை கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு
மிளகாய் வத்தல் - 10
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 100 மி.லி
பூண்டு - சிறியது ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை : கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பை ஊறவைத்து அத்துடன் உப்பு, மி.வத்தல், இஞ்சி, பூண்டு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஐம்பது மில்லி விட்டு காய்ந்த பின், வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கீரையைப் போட்டு வதக்கவும்.
இரண்டும் வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள பருப்பைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். பின் திறந்து அடிக்கடி அடி பிடிக்காமல் கிளறி விடவும்.
மீதம் உள்ள ஐம்பது மில்லி எண்ணெயை இடையிடையே சுற்றியும் ஊற்றிக் கிளறவும். ரொம்பவும் மொறுமொறுப்பாகி விடாமல் மென்மையான பதத்தில் இருக்கும்போதே இறக்கி விடவும்.
இந்தப் புட்டு சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன்.
-----------------------------------------------------------------------------------
Post a Comment