கோவை தேங்காய் பால்! உணவே மருந்து!!
'உணவே மருந்து' என்பதை கடைப்பிடித்த தமிழர்களின் உணவில், தவறாமல் இடம் பிடித்திருந்த பானகம், தேங்காய்ப் பால்! சில ஆண்டுகளுக்கு முன...
சில ஆண்டுகளுக்கு முன் வரை, பல வீடுகளில், மாதம் ஒரு முறையாவது இதை தயாரித்து, பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது.
நெஞ்சுச்சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமாகவும், மீண்டும் வராமல் தடுக்கவும் தேங்காய்ப் பால் தயாரித்து கொடுத்தனர் நம் முன்னோர். மேலும், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் சி, இ, பி1, பி3, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்கள் தேங்காயில் உள்ளன. எனவே தான், உணவில் எந்த வகையிலாவது, தேங்காய் இடம் பெறும்படி செய்தனர்.
இதன் முக்கியத்துவம் தெரிந்து, கோவை ஒண்டிப்புதூர் மற்றும் கணபதி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில், தேங்காய்ப்பால் விற்கின்றனர். எப்போது சென்றாலும், சுடச்சுட தேங்காய்ப் பால் பருகலாம்.
தேங்காய் துருவலில் இருந்து பால் எடுத்து, காய்ச்சி, வெல்லம், உளுத்தம் பருப்பு, சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்தால், உடலுக்கு வலுவை கொடுக்கும் தேங்காய்ப் பால் தயார்!
இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், டீ, காபிக்கு பதில், தேங்காய் பால் பருகிச் செல்கின்றனர். இது, வயிற்றை நிரப்புவதுடன், உடலுக்கும் பலத்தைக் கொடுப்பதால், தொழிலாளர்களுக்கு உற்ற பானமாக திகழ்கிறது.
கோவை பக்கம் போனால், தேங்காய்ப் பாலை தவறாமல் பருகி வாருங்கள்!'
Post a Comment