வாசகிகள் கைமணம்! தர்பூசணி அல்வா
வாசகிகள் கைமணம்! தர்பூசணி அல்வா தேவையானவை: தர்பூசணி பழத்தில் தோலுக்கு அடியில் இருக்கும் வெண்மையான பகுதி (துருவியது) - 2 கப், வெள்ளை வெல்லம்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1903.html
வாசகிகள் கைமணம்!
தர்பூசணி அல்வா
தேவையானவை: தர்பூசணி பழத்தில் தோலுக்கு அடியில் இருக்கும் வெண்மையான பகுதி (துருவியது) - 2 கப், வெள்ளை வெல்லம் அல்லது சர்க்கரை - அரை கப், முந்திரி, திராட்சை -தேவைக்கு, கேசரி பவுடர், ஏலக்காய்தூள் - சிறிது, நெய் - கால் கப்.
செய்முறை: ஒரு வாணலியில் நெய்விட்டு தர்பூசணி துருவல் போட்டு, பச்சை வாசனை போகும் வரை சுருள வதக்கி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். வெல்லம் போடுவதானால் வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஊற்றி கிளற வேண்டும். நன்கு சுருண்டு வந்த பின் முந்திரியை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்தூள் சேர்க்கவும்.
Post a Comment