வாசகிகள் கைமணம்! இனிப்பு பூரி தேவையானவை: துருவிய தேங்காய் - ஒரு கப், திராட்சை - 10, முந்திரி - 10, கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - ஒரு கப்...

வாசகிகள் கைமணம்!
இனிப்பு பூரி
தேவையானவை: துருவிய தேங்காய் - ஒரு கப், திராட்சை - 10, முந்திரி - 10, கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிது.
செய்முறை: மைதா மாவு, கோதுமை மாவு இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியான மாவாக கலந்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை சர்க்கரை கலந்து பூரணமாகக் கிளறி, முந்திரி, திராட்சையை சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும். மாவை பூரிகளாக இட்டு உள்ளே பூரணம் வைத்து மடித்து ஸோமோசி போல் செய்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். வெளியூர் செல்லும் பிரயாணங்களுக்குக் கூட ஏற்றதாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------
Post a Comment