சமையல் குறிப்புகள் !'மட்டன் பிரியாணி '

'மட்டன் பிரியாணி ' தேவையான பொருட்கள்: வெள்ளாடு - கறி - 1 கிலோ . முன்னங்கால் ஒன்றையோ, பின்னங்கால் ஒன்றையோ முழுதாக வாங்கிக் கொள்ளல...

'மட்டன் பிரியாணி ' தேவையான பொருட்கள்: வெள்ளாடு - கறி - 1 கிலோ . முன்னங்கால் ஒன்றையோ, பின்னங்கால் ஒன்றையோ முழுதாக வாங்கிக் கொள்ளலாம். பின் பிரியாணிக்குத் தேவையான கறியைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, நிறைய எலும்பு கலந்த கறியில் மட்டன் குருமா வைக்கலாம். மீதமுள்ள கறியை மற்றொரு நாளுக்கோ, மட்டன் வறுவலுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். தொடையை முழுதாக வாங்குவதில் உள்ள வசதி, தொடைக்கறி கொழுப்பு குறைந்து, ஊன் நிறைந்து சுவையாக இருக்கும். பிரியாணிக்குத் தேவையான சிறிதளவே கொழுப்பு கலந்த, ஹார்ட் போன்ஸ் இல்லாத, சதை மிகுந்த கறித் துண்டுகளை மொத்த தொடைக்கறியிலிருந்து செலக்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். மிருதுவான எலும்புகள் இருக்கிற கறித்துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். எலும்புகளிலிருந்து வெளிவரும் மஜ்ஜையும், எண்ணெயும் பிரியாணிக்குச் சுவை சேர்ப்பதால், போன்லஸ் கறித்துண்டுகள் மட்டுமே போடுவது நல்லதல்ல. இந்தக் கறித் துண்டுகளை முதலில் ஒருமுறை தண்ணீரில் கழுவவும். இரண்டாம் முறை, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலக்கி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். மூன்றாம் முறையும், நான்காம் முறையும், மஞ்சள் போகும் அளவு கறித்துண்டுகளை கழுவவும். கறியை நிறைய நேரம் தண்ணீரில் ஊறவிடக் கூடாது. கறித்துண்டுகள் சைஸ் பெரியதாக இருக்கவேண்டும். பாஸ்மதி அரிசி - 5 கப் ( 1000 ml) காய்ந்த மிளகாய் (மீடியம் சைஸ்) - 15 பூண்டு (நார்மல் சைஸ்) - 55 இஞ்சி - பூண்டின் அளவில் 40% கிராம்பு - 12 பட்டை (சிறிய சைஸ்) - 6 அல்லது 7. ஏலக்காய் - 3 பச்சை மிளகாய் - 9 (நீளவாக்கில், ஒரு மிளகாயை இரண்டாக, அரிந்து கொள்ள வேண்டும்) பிரியாணி இலை (மருவி, பிரிஞ்சி இலை என்றும் அழைக்கப்படும்) - 5 அல்லது 6. புதினா - கட்டில், 65%. புதினாவை ஆய்ந்து பின் chop செய்து கொள்ள வேண்டும். தண்டைக் கூட எறிந்து விடாமல் பயன்படுத்தலாம். ப்ளம் தக்காளி - 5 அல்லது 6 (சைஸைப் பொறுத்து). ஒரு தக்காளியை 16 துண்டுகளாக என்னும் சைஸில் அரிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலை - கட்டில், 80%. சிறிய கட்டென்றால், முழுக்கட்டும். கொத்தமல்லியை ஆய்ந்து பின் chop செய்து கொள்ள வேண்டும். தண்டைக் கூட எறிந்து விடாமல் பயன்படுத்தலாம். பெரிய, சிவப்பு வெங்காயம் (Big Red Onion) - 2. பெரிய என்றால் நிஜமாகவே பெரிய. சிவப்பு வெங்காயம் நிறைய தண்ணீர் விடாது, வதக்கும் போது ஒன்றுடன் ஒன்று பிசிராக, மஞ்சள் வெங்காயம் போல ஒட்டிக் கொள்ளாது என்பதால், ரெட் ஆனியன் போடுவது நல்லது. மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் என்றால் 3 போடலாம். நம்ம ஊர் (தமிழ்நாடு) சிறிய வெங்காயம் என்றால், ஒரு கிலோ கறிக்கு ஒரு கிலோ சிறிய வெங்காயம் போட வேண்டும். பெரிய வெங்காயத்தைப் பிரியாணிக்கென்று நீள நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். நிறைய வெங்காயம் போட்டால், இனிப்புத் தன்மை வந்துவிடும். எனவே, நிறைய வெங்காயம் போட விரும்பினால், கார வகையறாக்களை அதற்கேற்றவாறு கூட்டிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பிரியாணிக்கு வெண்ணெய்க்கு பதில், டால்டா சேர்ப்பர். டால்டா என்றால் போதுமான அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய டால்டா சேர்த்தால், பிரியாணி திகட்டிவிடும். வெண்ணெய் பாரை, உருக்கிக் கொள்ள வேண்டும். வெண்ணெயைக் காய்ச்சக் கூடாது. உருக்கத்தான் வேண்டும். எலுமிச்சம் பழம் - 1/2 (பாதி). எண்ணெய் - 15 ஸ்பூன் செய்முறை: 1.) காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை ஆகியவற்றை மேற்சொன்ன அளவுகளில், தண்ணீர் சிறிதளவே ஊற்றி கெட்டியான பேஸ்ட் ஆக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். 2.) குக்கரில், 15 ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் ஏலக்காய் போட்டு தாளிக்கவும். ஏலக்காய் வெடித்தவுடன், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஆய்ந்து, கழுவி பின் chop செய்து வைத்த புதினாவையும், கொத்தமல்லி இலையையும் போட்டு தாளிக்கவும். 3.) பின்னர், நீளவாக்கில் அரிந்து வைக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆக வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், நன்கு வதக்கப்பட வேண்டும். 4.) வெங்காயம் முக்கால்வாசி வதக்கப்பட்டவுடன், தக்காளித் துண்டுகள் போட்டு வதக்கவும். 5.) தக்காளி வதங்கியவுடன், கறித்துண்டுகளைப் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும். 6.) கறித்துண்டுகளைப் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்த பின், ஸ்டெப் ஒன்றில், அரைத்தவற்றைப் போட்டு கலக்கி இரண்டு நிமிடங்கள் வதக்கவும். 7.) உருக்கிய வெண்ணையைச் சேர்க்கவும். பிரியாணி இலை சேர்க்கவும். 8.) கறியில் ஏறுமளவு உப்பு சேர்த்து (பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்), குக்கரில் ஆறு விசில்கள் விடவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். தமிழ்நாட்டு கறிக்கு 3 விசில்கள் போதுமானது. 9.) குக்கர் விசில்கள் முடிந்து, ஆவி அடங்கியபின், அரிசியை வேகவைத்த கறி மசாலாவுடன் சேர்த்து, அரிசி அளந்து எடுத்த அதே கப்பில், எட்டரை கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்கவும். இந்த இடத்தில், தேவைப்படுவோர், பிரியாணி கலர் பொடி சிறிது சேர்த்துக் கொள்ளலாம். வேகும் பாத்திரத்தை மூடி வைக்கவும். குக்கர் சைஸ் போதவில்லை என்றால், ஒரு பெரிய பாத்திரத்திற்கு இவற்றை மாற்றிக் கொள்ளலாம். 10.) அரிசி பாதி அல்லது பாதிக்குமேல் வெந்தவுடன், எலுமிச்சம் பழம் பாதி பிழிந்து, அடுப்பை Simல் வைத்து வேக வைக்கவும். அடி பிடிக்காமல் அடிக்கடி துழாவி விட வேண்டும். 11). அரிசிக்கு சேர்த்துள்ள தண்ணீர் அரிசி 100% சதவீதம் வேக போதுமானதல்ல. அரிசி 75% டொ 80% வெந்திருக்கும்போதே எல்லா தண்ணீரும் இழுத்துக் கொள்ளும். எனவே தண்ணீர் குறைய குறைய அடிபிடிக்காமல் துழாவித் தர வேண்டும். தண்ணீர் இழுத்தவுடன், 'தம் ' செய்யும் வசதியுடையோர் (தம் = பிரியாணி பாத்திரத்தின் மேல், நெருப்பு வைத்து வேகவைப்பது), அதைச் செய்தால் அரிசி முழுதும் வெந்து, ஈரப்பதம் இழுத்துவிடும். . 30 நிமிடங்கள் கழித்து, டேஸ்ட் பார்த்தபின், இன்னும் சில நிமிடங்கள் வைப்பதா, இல்லை அரிசி வெந்தது போதுமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.

Related

வாசகிகள் கைமணம்! தயிர் வாழைக்காய் -- கிரீன் கீர் -- செண்பகப் பூ ஸ்வீட்

தயிர் வாழைக்காய் தேவையானவை: வாழைக்காய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 5, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ...

சமையல் குறிப்புகள் ! காஷ்மீரி ஆப்பிள் சட்னி- - நூடுல்ஸ் மஷ்ரூம்-- காலிஃப்ளவர் சூப்

காஷ்மீரி ஆப்பிள் சட்னி தேவையான பொருட்கள் : காஷ்மீரி ஆப்பிள் (தோலுடன் துருவியது _ ஒன்று, சீரகத்தூள், தனியாத்தூள், பட்டைத் தூள், ஏலக்காய்த் தூள் _ தலா ஒரு சிட்டிகை, ஜாதிபத்ரி _ சிறிதளவு, மிளகாய்த்தூள்...

சமையல் குறிப்புகள் ! ஜில் ஜில் ஃபலூதா

ஜில் ஜில் ஃபலூதா இதை சமைக்க வேண்டாம்! அப்படியே கலந்து சாப்பிடலாம். தேவை : சேமியா - 1 கப் பீட்ரூட் துருவல் - 1/4 கப் கேரட் துருவல் - 1/4 கப் வெள்ளரி துருவல் - 1/4 கப் வெல்லக் கரைசல் - 1 மேஜைக்கரண்டி...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Mar 12, 2025 11:38:25 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,130,352

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item