உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? அழகு குறிப்புகள்!
இங்கே நான் கொடுக்கும் குறிப்புகள் அனைத்தும் நான் பயன்படுத்தும் குறிப்புகள். இதுவரை உபயோகப்படுத்திய அனைவருக்கும் நல்ல பலன்களை தந்துள்ளது...
1)எப்போதும் போல் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பொடியை முகம்,உடம்பில் தேய்த்து குளித்தால் பரு,கரும்புள்ளி,ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது.இதற்கு தேவையானது
பன்னீர் ரோஜா - 200 (காய வைத்தது)- நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது
பூக்கடையிலிருந்து வாங்கி வந்து காய வைத்து கொள்ளவும்.Light Rose not Dark Rose.
வசம்பு - 100 கிராம்- தழும்பு,கரும்புள்ளிக்கு உகந்த மருந்து
கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம்
புனுகுப்பட்டை - 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
கடலைப்பருப்பு -100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
இவை அனைத்தையும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத்து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பேபி சோப் போட்டு குளிக்க வைத்த பிறகு இந்த பொடியை உடம்பு முழுதும் தேய்த்து குளிப்பாட்டுவோம்.சிறு வயதிலிருந்து குளித்தால் உடம்பில் முடி இருக்காது.ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் முடியை போக்கும் தன்மையுள்ளது.
மேலும் முகத்திற்கு போடும் மஞ்சள் போல் கலர் பிடிக்காது.போட்டதே தெரியாது.
2) இதே பொடியை உபயோகப்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு பேக்(Face Pack)
போடலாம்.
தயிர் - 1 ஸ்பூன்
பொடி - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 10 துளி
எல்லாவற்றையும் கலந்து முகம்,கழுத்து முழுவதும் தடவி காயும் வரை ஊறவைத்து கழுவவும்.
3) முகத்தில் பரு இருப்பவர்கள் மேலே சொன்ன பேக்குடன் 1 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த்து பேக் போடவும்.முல்தானி மட்டி(ஒரு வகை களிமண்) முகத்தில் எண்ணெய் பசையை சுத்தமாக எடுத்து விடும்.
பரு வரவே வராது.
எண்ணெய் பசை சருமம்,பரு அதிகம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறையும்,சாதாரண சருமம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும்,உலர்ந்த சருமம் உள்ளவர்கள் தயிர் அதிகம் கலந்து மாதம் ஒரு முறையும் உபயோகப்படுத்தவும். ஆண்களுக்கும் இந்த பேக் போடலாம்.
4)முக்கியமாக இரவு தூங்கப்போகும் போது முகம் கழுவி விட்டுதான் படுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.முகத்தில் எதுவும் வராது.பேபி லோஷன் மட்டும் போட்டுக் கொள்ளலாம்.
5) கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையானது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீரை(Rose Water) ஊற்றி இரண்டு கண்ணிலும் வைத்துக் கொள்ளுங்கள்.
6)முகத்தை மாதம் ஒரு முறை ஸ்க்ரப்பிங் செய்யவும்.அப்போதுதான் இறந்த செல்கள் நீங்கும்.மேலே குறிப்பிட்ட பொடியையே தண்ணீரில் குழைத்து உபயோகப்படுத்தலாம்.அல்லது
ஆப்பிரிகாட் ஸ்க்ரெப்பர் போல கடையில் கிடைக்கும் தரமான பொருட்களை உபயோகப்படுத்தவும்.
7)கைகள் மிருதுவாக இருக்க தூங்கும் முன்பு சமையல் உப்பை(Table Salt) ஐ- 2 ஸ்பூன் ஈரமான கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்.பிறகு கையை கழுவி துடைத்து ஆலிவ் ஆயில் தடவி விடவும்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிக குளிர்ச்சியாக இருக்கும் பாக்கினை தவிர்ப்பது நலம். எலுமிச்சை, தயிர் சேர்க்காமல் கடலைமாவு, பன்னீர், முல்தானி மட்டி(எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால்), கஸ்தூரி மஞ்சள், சந்தனம் சேர்த்து பாக் போடலாம்.
முகத்தில் ரொம்ப ட்ரையாக பவுடர் போல் உதிரும்வரை வைத்திருக்காதீர்கள். லேசான ஈரப்பதம் இருக்கும்போதே முகத்தை கழுவி விடுங்கள். ஏனெறால் பவுடராக உதிர்ந்து மூக்கினுள் சென்று அலர்ஜி ஏற்படுத்தவும் சான்ஸ் இருக்கிறது.
Post a Comment