நீரும்... ஆரோக்கிய வாழ்வும்...! ஹெல்த் ஸ்பெஷல்!!

நீரும்... ஆரோக்கிய வாழ்வும்... ஃபிட்னெஸ் / குடும்பம் / ஹெல்த் / உணவு / அழகு நீர் இன்றி அமையாது உலகு. நம...

நீரும்... ஆரோக்கிய வாழ்வும்...
ஃபிட்னெஸ் / குடும்பம் / ஹெல்த் / உணவு / அழகு
நீர் இன்றி அமையாது உலகு. நம் அன்றாட வாழ்வில் குளிப்பது, துவைப்பது, சமைப்பது என நீரின் அவசியம் என்ன என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நீரின் அவசியம் பற்றிய விழிப்பு உணர்வு போதுமான அளவு இல்லை. 'ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?' என்ற ஒரு கேள்விக்குக் கூட நம்மில் பலராலும் எளிதில் பதில் சொல்ல முடியாது. தனி மனித ஆரோக்கியத்தில் தண்ணீர், எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி சிறுநீரகவில் மருத்துவர் சேகரிடம் கேட்டோம்.

'நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நீரைச் சார்ந்தே உள்ளன. நம் உடலில் 60 சதவிகிதம் நீர்தான் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் 85 சதவிகிதம் நீர்தான் உள்ளது. அதனால்தான் உணவைக் காட்டிலும் நீர் மிகவும் அவசியமானது என்கிறோம். 

சுவாசம், வியர்வை, சிறுநீர், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரிக்கட்ட, இந்தச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரிமானம் ஆக, செரிமானத்தில் இருந்து ஊட்டச் சத்துக்கள் கிரகிக்க, உடலின் வெப்பநிலையைத் தக்கவைக்க, சீரான ரத்த ஓட்டம் இருக்க, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு சென்று சேர, திசுக்களில் உருவாக்கப்படும் நச்சுக்களை வெளியேற்ற என நீரின் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும். 

உடலில் போதுமான நீர்ச் சத்து இல்லை என்றால், ஏற்படக்கூடிய மிக மோசமான பிரச்னை, டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. நீரிழப்பால், மூட்டு, வயிறு, முதுகுப் பகுதியில் வலி என உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை எனில், அது நம்முடைய உடலின் முழு இயக்கத்தையும் பாதிக்கும்.
ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. 

நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டலம் என்பதால், இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் (எட்டு கிளாஸ்) தண்ணீர் என்பது கட்டாயம். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். 

சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். 

மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும்.

 உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
 தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும். 

நீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்
 வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.

 தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.

பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.

Related

மயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்!

மயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்! அலைபாயும் கூந்தலை பராமரிக்க..... நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்...

நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ!

நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ! நாம் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்திருக்கிறதா? ஆரோக்கியமாகத்தான் சாப்பிட்டோமா என்பதை மலம் காட்டும் அறிகுறிகள் மூலமாகவே கண்டுபிடித்து விடலாம்.  மலம், தண்ணீ...

வயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்!

வயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்: * சீரகத்தை வெறும் வாணலியில் கருப்பாக்கித் தீயும்  அளவுக்கு வறுத்துப் பொடி செய்து... ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கால் டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 8:36:14 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,717

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item