மோடி ஆட்சிக்கு வந்தால்... ? இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!
மோடி ஆட்சிக்கு வந்தால்... சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என பி.ஜே.பி-யின் தலைவர் ராஜ்...
மோடி ஆட்சிக்கு வந்தால்...
இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை கேள்விக்குறியாக ஆகிவிடும்! இந்துத்துவவாதிகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்படும் அபாயம் ஏற்படும்.!
இந்திய அரசியல் சட்டத்திற்கு மட்டுமா, ஆபத்து? சிறுபான்மை சமூகங்கள் இந்தியாவில் வாழ்வதற்கே இயலாத நிலை ஏற்படும்.! சிறுபான்மை சமூகங்களின் வாழ்வாதாரங்கள் சட்டப்படியே பறிக்கும் செயலில் பாசிச இந்துக்கள் முயல்வார்கள்.!
மோடி ஆட்சிக்கு வந்தால்..அரசின் அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்படும். தங்கள் விருப்பம்போல வரலாற்றை திருத்துவார்கள்! கோட்சேவை தியாகியாகவும் காந்தியை துரோகியாகவும் கட்டுவார்கள்!
இந்து மத ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ஆர்.எஸ்.எஸ். கைகாட்டும் அமைப்புகளுக்கும் ஆட்களுக்கும் கோடிகணக்கில் ஒதுக்கப்படும்.! அதைப்பற்றி எவனும் கேள்வி கேட்க முடியாது.! அப்படியே கேட்டுவிட்டு இந்திய திருநாட்டில் உயிருடன் உலவ முடியாது.!
கல்வி என்ற பெயரில் பொய்களும்,புராணங்களும் உண்மை என்று நம்ப வைக்க, நச்சு கருதுக்களை விதைப்பார்கள்!.சிறுபான்மையினரைப் பற்றி இழித்தும் பழித்தும் பொய்யுரைகளை பரப்புவார்கள்! கல்வி என்ற பெயரில் மாணவர்கள், இளைஞர்களிடம் அதனை திணிக்கும் செயல்களைச் செய்வார்கள்.!
" இந்துவை ராணுவமாக்கு, இராணுவத்தை இந்துமயமாக்கு!" என்று ஏற்கனவே கொக்கரிக்கும் இவர்கள், உண்மையிலேயே இராணுவத்தை காவிமயமாக்கி விடுவார்கள்.! சிறுபான்மையின மக்கள், உழைக்கும் மக்கள் மீது இந்துவாக்கப்பட்ட இராணுவத்தை ஏவுவார்கள்.! மோடி ஆட்சிக்கு வந்தால்.. உரிமைகள் கேட்டு எந்த அமைப்புகளும் போராட முடியாது.! நியாயம் கேட்க்க முடியாது. !மனித உரிமைகள் மறுக்கப்படும்.
சிறுபான்மையினர்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மத்திய அரசு வழங்கிவரும் இட ஒதுக்கீடு,கல்வி உதவித் தொகை, சலுகைகள் அனைத்தும் கிடைக்காது!
ஊழலை ஒலிப்பதாக சொல்லும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கமே ஊழலாக மாற்றப்படும்! லோக்பால் சட்டம் வரவே வராது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு எட்டாக்கனி ஆகும்.
ராஜேந்திர சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்படும். மதக் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால்," மதமாற்ற தடை சட்டம்" நாடுமுழுவதும் கொண்டுவரப்படும்.! சிறுபான்மையின மக்களை இந்த சட்டத்தின் மூலமே குற்றவாளிகள் ஆக்கி சிறைகளில் போட்டு சித்திரவதை செய்ய முடியும்.!
எதிர்கட்சியாக இவர்கள் உள்ள நிலையிலேயே இவர்களால் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட கலவரங்கள், படுகொலைகள் செய்யப்பட்ட சிறுபான்மையினர், கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள், நாடெங்கும் நடத்திய வன்முறைகள் ஏராளமாகும்.!
பாபர் மசூதி இடிப்பு போன்ற தேசிய அவமானங்களைச் செய்த இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை ஆளும் நிலை ஏற்பட்டால்... "பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்" என்பது உண்மையாகும்.!
Post a Comment