டிப்ஸ்... டிப்ஸ்... க ற்கள் பொருத்திய மூக்குத்தி, தோடு போன்றவற்றை சுத்தம் செய்யும்போது, ஒரு உலோக வடிகட்டி அல்லது சல்லடையினுள் வைத்து...
டிப்ஸ்... டிப்ஸ்...
கற்கள்
பொருத்திய மூக்குத்தி, தோடு போன்றவற்றை சுத்தம் செய்யும்போது, ஒரு உலோக
வடிகட்டி அல்லது சல்லடையினுள் வைத்து சுத்தம் செய்யவும். அப்போதுதான்
கற்கள், திருகாணி போன்றவை கை தவறினாலும் தொலைந்து விடாமல் பத்திரமாக
இருக்கும்
முறுகலான
தோசை செய்ய, ஒரு ஆழாக்கு உளுந்துக்கு இரண்டு ஸ்பூன் துவரம்பருப்பும், ஒரு
ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து ஊற வைத்து அரையுங்கள். தோசை முறுகலாகவும்
தங்க நிறத்திலும் வரும்.
பாகற்காய்
சமைக்கும்போது கசப்பு தெரியாமல் இருக்க, சர்க்கரை அல்லது வெல்லம்
சேர்ப்போம். அதற்குப் பதில், பாகற்காயை பொரியலாகச் செய்யும்போது, கேரட்
அல்லது பீட்ருட் துருவி, தாளிப்புடன் சேர்த்து வதக்கிவிட்டு, பின்னர்
பாகற்காய் சேர்க்கவும். பாகற்காயை குழம்பு அல்லது பிட்லை செய்யும்போது, சில
துண்டுகள், கேரட்டையும் சேர்த்து வேகவிட்டால் ருசியும் சத்தும் கூடுவதோடு
கசப்பும் குறையும்
மோர்க்குழம்பு,
தேங்காய் சட்னி, அவியல் போன்றவை தயாரிக்கும்போது, பச்சை மிளகாயை அப்படியே
சேர்த்து அரைக்காமல், ஒரு சொட்டு சமையல் எண்ணெயை, சூடான வாணலியில் விட்டு,
பச்சை மிளகாயைப் போட்டு சில விநாடிகள் புரட்டி, பின்னர் அரையுங்கள்.
சுலபமாக அரைபடுவதுடன், அடுத்த நாள் வரைகூட பதார்த்தங்கள் கெட்டுப் போகாமல்
இருக்கும்.
ஒரு
நிமிடத்தில் ஒரு ராய்தா தயாரிக்கலாமா? ஒரு கப் கெட்டித் தயிரில் இரண்டு
சிட்டிகை உப்பும், அரை ஸ்பூன் சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும்
சேர்த்துக் கலக்கினால்... ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற அவசர ராய்தா ரெடி..
விருப்பப்பட்டால், கூடுதலாக கைவசமுள்ள மிக்சர், ஓமப்பொடி, பூந்தி இதில்
ஏதாவது தூவிப் பரிமாறலாம்.
தேவையைவிட
கீரை அதிகமாக இருக்கிறதா? அவற்றின் வேர்களை நீக்கிவிட்டு, கழுவி ஒரு
தாளில் பரப்புங்கள். ஈரப்பதம் காய்ந்த பிறகு, வாணலியை சூடாக்கி, அடுப்பை
அணைத்துவிட்டு சில விநாடிகள் நிறம் மாறாத அளவுக்கு கீரையைப் போட்டு
புரட்டுங்கள். ஆறியதும்... ஒரு டப்பா அல்லது கவரில் போட்டு குளிர்சாதனப்
பெட்டியில் வைத்துவிட்டால், நாலு நாட்களானாலும் அழுகிப் போகாமல் பச்சைப்
பசேலென்று இருக்கும்.
Post a Comment