அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா! "பனானா காக்ரா' -- சமையல் குறிப்புகள்,
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா! இது, "பனானா காக்ரா' செய்முறை நேரம்! தேவையானவை: கெட்டியான அதிகம் பழுக்காத வாழைப்பழம்-2, அரிசி மாவு,...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_8119.html
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது, "பனானா காக்ரா' செய்முறை நேரம்!
தேவையானவை: கெட்டியான அதிகம் பழுக்காத வாழைப்பழம்-2, அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, மைதா மாவு -தலா ஒரு கப், மிளகாய்த் தூள்-3 டீஸ்பூன், பெருங்காயத் தூள்-சிறிதளவு, நெய்-2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
செய்முறை: மூன்று மாவுகளையும் வெறும் கடாயில் தனித்தனியே சூடு வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். பிறகு ஒன்றாகக் கலந்து, உப்பு, மிளகாய்த் தூள், நெய், வாழைப்பழம் சேர்த்து மசிக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் இரண்டு மூன்றாகப் போட்டு, சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இந்த பனானா காக்ரா!

Post a Comment