மாம்பழ புளிசேரி ....வாசகிகள் கைமணம்
மாம்பழ புளிசேரி தேவையானவை: பெரிய மாம்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - 2 கப், தேங்காய் - அரை மூடி, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூ...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_2087.html
மாம்பழ புளிசேரி
தேவையானவை: பெரிய
மாம்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - 2 கப், தேங்காய் - அரை மூடி,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, வெந்தயம்
- தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, சீரகம் -
அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தேங்காயைத் துருவி... அதோடு சீரகம், சிறிதளவு தயிர், கறிவேப்பிலை ஒரு
ஆர்க்கு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை தோல்
சீவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் விட்டு, மிளகாய்த்தூள்,
மஞ்சள்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் சற்று கெட்டியாக
மசித்துக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை விழுது,
உப்பு, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நுரைத்து
வரும்போது மீதமுள்ள தயிரை ஊற்றிக் கிளறி இறக்கவும். வாணலியில் எண்ணெய்
ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, வெந்தயம், காய்ந்த மிளகாய்
தாளித்துக் கொட்டி கலந்தால்... மாம்பழ புளிசேரி ரெடி.
மாம்பழ புளிசேரி: தயிருக்குப் பதிலாக மில்க் க்ரீம் சேர்த்தால், மேலும் சுவையாக இருக்கும்.
Post a Comment