மருமகன் காப்பீட்டில் இனி மாமனாரும்..இன்ஷூரன்ஸ்
மருமகன் காப்பீட்டில் இனி மாமனாரும்.. ஃப் ளோட்டர் பாலிசி பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். கணவன்...

குடும்பத் தலைவர், தன்னுடைய மகன்கள், மகள்கள், அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மருமகள், பேரக் குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியும். ஆனால், அவரது சகோதரர், சகோதரிக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாது. அதேபோல, ஒரு மாமனார் நினைத்தால் மருத்துவக் காப்பீட்டில், மருமகனைச் சேர்த்துக்கொள்ள முடியாது. ஆனால், மருமகன் தன்னுடைய மாமனாரை பாலிசியில் சேர்த்துக்கொள்ள முடியும்.
இந்த பாலிசியில் பிரசவத்துக்கு க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். ஒருவர் தன்னுடைய மகளைக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலிசியில் சேர்த்திருந்தால், பிரசவத்தின்போது க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். மேலும் புதிதாகப் பிறக்கிற குழந்தைக்கு, அடுத்த ப்ரீமியம் கட்டும் வரை க்ளைம் வாங்கிக்கொள்ள முடியும். அடுத்த ப்ரீமியம் கட்டும்போது, அந்தக் குழந்தையையும் பாலிசியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சில வீடுகளில், ஆண் வாரிசு இல்லாமல், பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள். இந்த நிலையில், பெண்கள் தங்கள் பாலிசியில் பெற்றோரையும் இணைத்துக்கொள்ளலாம்.
தேவை இருப்பவர்கள் இதையும் பரிசீலிக்கலாம்.
Post a Comment