''கிணறு வெட்டவும், நிலச் சீர்த்திருத்தம் செய்யவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் பெற்றேன். கிணறு வெட்டியபோது, நீர்...
''கிணறு வெட்டவும், நிலச் சீர்த்திருத்தம்
செய்யவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் பெற்றேன். கிணறு
வெட்டியபோது, நீர் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சலும் சரியாக
கிடைக்கவில்லை. இதனால், கடன் கட்டமுடியாத நிலையில் உள்ளேன். வங்கி
அதிகாரிகள் கடனைத் திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால்,
வாழவே வழியில்லாத நிலையில், கடனை எப்படி கட்டுவது? இப்பிரச்னையில் இருந்து
மீள வழி சொல்லுங்கள்?''
ஓம். நமச்சிவாயம், குளித்தலை.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி எம்.
ராமச்சந்திரன் பதில் சொல்கிறார்.

''விவசாயக்
கடன் பெற்று, இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வங்கி
நினைத்தால் சில சலுகைகளை அளிக்க முடியும். கடன் பெற்ற வங்கியின் கிளை
மேலாளருக்கு, தங்களின் நிலை குறித்து விரிவாக விண்ணப்பம் எழுத வேண்டும்.
அதில், இப்போது உள்ள சூழ்நிலையில் உடனே கடனைத் திரும்பச் செலுத்த முடியாது.
ஆகவே, கடனைத் திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
மேலும், கடனுக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்து உதவி செய்யுங்கள்
என்று குறிப்பிடவும். இந்த விண்ணப்பத்தின் நகலை, 'மண்டல மேலாளர்,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஒப்பணக்கார வீதி, கோயம்புத்தூர்-1’ என்ற
முகவரிக்கும் அனுப்பி வைக்கவும். மண்டல மேலாளர், தங்களின் கோரிக்கை
உண்மைதானா? என்று ஆய்வு செய்து, அதிகாரிகள் மட்டத்தில் பரிந்துரை பெறுவார்.
நீங்கள் பெற்றுள்ள கடன் தொகைக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யவும், தவணைக்
காலத்தை நீட்டிக்கவும், மண்டல மேலாளருக்கு அதிகாரம் உண்டு. எனவே, உடனே
விண்ணப்பத்துடன் கிளை மேலாளரை நேரில் சந்தியுங்கள். நிச்சயம் வங்கி
அதிகாரிகள் உதவி செய்வார்கள். எக்காரணத்தைக் கொண்டும், வேறுவிதமான
வழிமுறைகள் எதையும் தேட வேண்டாம்.''
செல்போன்: 98404-36250.
Post a Comment