டீ குடிக்கும் செலவில்...ஒரு குடும்ப கவசம் ! -- இன்ஷூரன்ஸ்
உங்களுக்குப் பிறகு குடும்பத்துக்குப் பொருளாதாரச் சிக்கல் வரக்கூடாது என நினைக்கிறீர்கள் எனில், டேர்ம் பாலிசி எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது...

ஒரு சின்னக் கணக்கு... புதிதாகத் திருமணம் ஆகும் பெண், தினம் 10 ரூபாயை எடுத்து உண்டியலில் சேமிக்கிறார். அப்படியெனில், 20 வருடங்கள் கழித்து அவர் சேமித்த தொகை 73 ஆயிரம் ரூபாய். சிறு துளி பெரு வெள்ளம் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் பத்து ரூபாய் சம்பாதித்தால்... அதிலிருந்து ஒரு ரூபாயாவது நிச்சயம் சேமிக்கப் பழகுங்கள். முடிந்த வரை தபால் நிலையம் மூலமாவது கொஞ்சம் கொஞ்சமாகச் சேமியுங்கள்.
பெரும்பாலான பெண்கள், கணவரை சார்ந்தே வாழப் பழகிக் கொள்கிறார்கள். கணவருக்கு ஏதாவது விபரீதம் நேரும்போது வாழ்க்கையே சூன்யமாகி விடுகிறது. அதனால், படித்த படிப்புக்குத் தகுந்த வேலைக்குச் செல்ல பழகிக் கொள்ளுங்கள். வெளியில் வேலைக்குப் போக விருப்பமில்லை என்றால்... சுயதொழில் கற்றுக் கொண்டாவது வீட்டிலிருந்து பிஸினஸ் செய்யத் தயாராகுங்கள். பொருளாதார ரீதியாக என்றைக்கும் அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கப் பழகாதீர்கள்.
Post a Comment