உங்க குழந்தையை பூரான் கடிச்சிடுச்சா--பாட்டி வைத்தியம்,
குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கும் போதோ அல்ல ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபட்டு இருக்கும் போதும் பூரான் கடித்து விட்டால் குழந்தைகளுக்கு அழ...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_4977.html
குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கும் போதோ அல்ல ஏதேனும் விளையாட்டுகளில்
ஈடுபட்டு இருக்கும் போதும் பூரான் கடித்து விட்டால் குழந்தைகளுக்கு அழதான்
தெரியுமே தவிர அவர்களை கடித்தது என்ன என்று சொல்ல தெரியாது.. ஆனால்
பெற்றோர்களே உங்கள் செல்ல குழந்தையை கடித்தது பூரான் என்று மிக சுலபமாக
கண்டுபிடிக்க முடியும்....பூரான் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு
நிறத்தில் காணப்படும். அதை வைத்தே அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.
பொதுவாக பூரான் கடித்தால் உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறிந்துக்கொள்ள முடியும்.
பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்.. குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லாம் தந்து சாப்பிட சொல்லலாம்.

Post a Comment