முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்.... ஜவ்வரிசி - 1 கப் முளைகட்டிய பச்சைப்பயறு - 2 கப் இஞ்சி - சிறிய துண்டு (துருவிக்கொள்ளவும்) மிளகுத்தூள் -...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_7258.html
தேவையான பொருட்கள்....
ஜவ்வரிசி - 1 கப்
முளைகட்டிய பச்சைப்பயறு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு (துருவிக்கொள்ளவும்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து உடைத்த வேர்க்கடலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1 சிறியது
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை....
* எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
• ஜவ்வரிசியை தேவையான தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
• கடாயில் நெய்விட்டு ஊறிய ஜவ்வரிசி கலவையைப் போட்டு மிதமான தீயில் பஞ்சு போல் மிருதுவாகும் வரை மூடி வேகவிடவும்.
• அதில் முளைகட்டிய பயறுகளை சேர்த்து வதக்கி வேகவிடவும்.
•
பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அத்துடன்
வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், மிளகுத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி,
எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.
Post a Comment