நன்னாரி சர்பத் --சமையல் குறிப்புகள்
நன்னாரி வேர் - 1 சிறிய கொத்து, தண்ணீர் - 100 மி.லி., சர்க்கரை - 200 கிராம், சிட்ரிக் ஆசிட் - 5 கிராம், சுக்குப்பொடி - 1 டீஸ்பூன், மிளகுத்...

தண்ணீர் - 100 மி.லி.,
சர்க்கரை - 200 கிராம்,
சிட்ரிக் ஆசிட் - 5 கிராம்,
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்.
தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வந்ததும், சிட்ரிக் ஆசிட் சேர்த்து, அடுப்பை அணைத்து, ஆற விடவும். ஆறியதும் சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்க்கவும். நன்னாரி வேரை நன்கு அலசி, பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுபடி அலசி, வேர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க விடவும்.
அது ‘திக்’காக மாறியதும், அடுப்பை அணைத்து, வடிகட்டி, சர்க்கரைக் கரைசலுடன் சேர்த்துக் கிளறி, பாட்டிலில் நிரப்பி வைக்கவும்.
தேவைப்படும் போது, இந்த சிரப்பில் கால் பங்கு எடுத்து, முக்கால் பங்கு குளிர்ந்த தண்ணீர் விட்டுப் பரிமாறவும்.
Post a Comment