கோடை டிப்ஸ்! உபயோகமான தகவல்கள்
* குளிக்கும் தண்ணீரில், லேவண்டர் ஆயில், வெட்டிவேர் ஆயில் போன்றவற்றை, சில துளிகள் கலந்து குளித்தால், புத்துணர்வுடனும், நறுமணத்துடனும் இருக்க...
* அடர் நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். உள்ளாடை களும், 100 சதவீதம் காட்டனாக இருப்பது நல்லது.
* பெரிய நெல்லிக்காய் இரண்டு எடுத்து, விதையை நீக்கி, சதைப்பற்றை மட்டும் அரைக்கவும், அத்துடன் தண்ணீர் கலந்து, தேன் அல்லது பனை வெல்லத்தை சேர்த்துக் குடிக்கலாம். நா வறட்சி சரியாகும்.
* தர்பூசணி பழத்திலுள்ள விதைகளை நீக்கி, சதைப்பற்றை மட்டும் அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பும், மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கலாம்.
* நுங்கை, மிக்சியில் அடித்து, தண்ணீர் சேர்த்து, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம்.
* சோற்றுக் கற்றாழையின் சதைப்பற்றை எடுத்து, நன்கு அலசி, வாணலியில் வதக்கி, தேனில் ஊற வைத்து, தேவைப்படும் போது சிறிது தண்ணீர் கலந்து, ஜூஸ் போல் குடிக்கலாம்.
*வெண் பூசணியை தோல், நீக்கி, அரைத்து, பனை வெல்லம் சேர்த்து, மிளகுத் தூள் தூவி குடிக்கலாம்.
*வெயில் நாட்களில், காலை, மாலை இரு வேளையும் சுவாசப் பயிற்சி செய்வது நல்லது.
* உப்பு, ஊறுகாய் அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
***
Post a Comment