வெண்டைக்காய் அவியல்---சமையல் குறிப்புகள்
இது மிகவும் சுவையாக இருக்கும். இதையும் எளிதில் செய்து விடலாம். இதை அனைத்து வகை சாதத்துடனும் சாப்பிடலாம். நீங்களும் செய்து பாருங்கள். தேவைய...

தேவையான பொருள்கள்:-
வெண்டைக்காய் – 1/4கிலோ
சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது
தக்காளி – 1கப் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – 1/4கப் பொடியாக நறுக்கியது
தேங்காய் துருவல் – 1கப்
பச்சைமிளகாய் – 6நம்பர்
சீரகம் – 1ஸ்பூன்
பச்சரிசி – 1ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/4ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :-
வெண்டைக்காயை நன்கு சுத்தம் செய்து 4பாகமாக வெட்டி வெயிலில் சிறிது நேரம் காய விடவும். ஏனென்றால் பிசுபிசுப்பு தன்மை வெயிலில் வைத்துவுடன் குறையும்.
பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் , சீரகம் , அரிசி ஆகியவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் வெட்டிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு பிசுபிசுப்பு தன்மை மாறி நன்கு உதறியாகும் வரை வதக்கவும்.
நன்கு வதக்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர், அரைத்த மசாலா, தேவையான உப்பையும் அதில் சேர்த்து 1கொதி வந்தவுடன் இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
சுவையான வெண்டைக்காய் அவியல் தயார்.
Post a Comment