கோதுமை ரொட்டி செய்யும்போது...வீட்டுக்குறிப்புக்கள்
கோதுமை ரொட்டி செய்யும்போது... முள்ளங்கியை துருவி கோதுமை மாவோடு கலந்து தேவையான அளவு உப்பு, மிளகாய் வற்றலைச் சேர்த்து விழுதாக அரைத்து சேர்த்...

முள்ளங்கியை துருவி கோதுமை மாவோடு கலந்து தேவையான அளவு உப்பு, மிளகாய் வற்றலைச் சேர்த்து விழுதாக அரைத்து சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். நன்றாக ஊறியதும் ரொட்டி செய்து சுடச்சுட சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். சத்தானதாகவும் இருக்கும்.
மைதாவை எளிதாக உபயோகிக்க...
சாதாரணமாக மைதாவை பயன்படுத்தினால் பிசு பிசுப்பாக இருக்கும். அதை இட்லித் தட்டில் துணியைப் போட்டு நீர் சேர்க்காமல் அப்படியே கொட்டி வேகவைக்க வேண்டும். அதன் பசைத் தன்மை போய்விடும். ஆற வைத்து டப்பாக்களில் எடுத்து வைத்துக் கொண்டால் அரிசி மாவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். முறுக்கு, சீடை, தோசை பூரி போன்றவற்றை தயார் செய்யலாம்.
தேங்காய் துவையல் சுவையாக இருக்க...
தேங்காய் துவையல் அரைக்கும்போது சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், ருசியாகவும் இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
சேமியா பாயாசம் செய்யும்போது...
சேமியா பாயாசம் செய்யும்போது, அத்துடன் சிறிது அவலை வறுத்து பொடித்துப் போட்டால் பாயாசம் சேர்ந்தாற்போல் இருப்பதோடு ருசியாகவும் இருக்கும்.
Post a Comment