வீட் வெஜ் அடை -- வாசகிகள் கைமணம் --சமையல் குறிப்புகள்!
வீட் வெஜ் அடை தேவையானவை: சம்பா கோதுமை ரவை - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - 4, கெட்டித் தயிர் - அரை கப், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - தலா 3 ...

தேவையானவை: சம்பா கோதுமை ரவை - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - 4, கெட்டித் தயிர் - அரை கப், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - தலா 3 டீஸ்பூன், முட்டைகோஸ் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கெட்டித் தயிரில் சம்பா கோதுமை ரவையை ஊற வைக்கவும். பிரெட் ஸ்லைஸை நீரில் நனைத்து பிழிந்து வைக்கவும். ஊற வைத்த கோதுமை ரவை, பிரெட் ஸ்லைஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். மாவை சிறு சிறு அடைகளாக தோசைக்கல்லில் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
Post a Comment