கைமணம்! இஞ்சி ஊறுகாய்
இஞ்சி ஊறுகாய் தேவையானவை: இஞ்சி (கழுவி, துருவியது) & ஒரு கப், புளி & எலுமிச்சை அளவு, வெல்லம் & அரை கப், உப்பு & முக்கால் டீஸ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6856.html
இஞ்சி ஊறுகாய்
தேவையானவை: இஞ்சி (கழுவி, துருவியது) & ஒரு கப், புளி & எலுமிச்சை அளவு, வெல்லம் & அரை கப், உப்பு & முக்கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் & கால் கப். தாளிக்க: கடுகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன்.
செய்முறை: துருவிய இஞ்சி, புளி இரண்டையும் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். பிறகு, வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, வெல்லநீரை இஞ்சி விழுதில் சேர்த்து கொதிக்கவைக்கவும். தளதளவென கொதித்து ஊறுகாய் பதம் வந்ததும், இறக்கி ஆறவிட்டு ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இஞ்சி ஊறுகாய்: சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து ஊறுகாயில் சேர்க்கலாம். இஞ்சியின் சூட்டை வெந்தயத்தின் குளிர்ச்சி சரிசெய்யும்.
---------------------------------------------------------------------------------------
1 comment
எளிமையாக தெரிகிறது .நன்றி
Post a Comment