ஹெல்த் ஸ்பெஷல்! உடலை அழகாக்கவும், உறுதியாக மாற்றவும் இந்த மந்திரக் கயிறு மூலம்

உடலை அழகாக்கவும், உறுதியாக மாற்றவும் சற்று எலாஸ்டிக் தன்மை இருக்கிற ஒரு கயிறு போதும். நீங்கள் வீட்டிலேயே இதைப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலனை...

உடலை அழகாக்கவும், உறுதியாக மாற்றவும் சற்று எலாஸ்டிக் தன்மை இருக்கிற ஒரு கயிறு போதும். நீங்கள் வீட்டிலேயே இதைப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்ளமுடியும். படு சுலபமாக நீங்கள் உங்கள் பையில் எடுத்துக் கொண்டு போகலாம். ஆபீஸ், வீடு, வெளியூர் என எங்கு போகும் போதும் உங்கள் பயிற்சி தடைபடாது. ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் போதும். உடலின் ஒவ்வொரு தசையும் பயிற்சியில் பங்கு பெறுவதால் முழு உடல் நலம் காக்கப்படுகிறது. படு சுலபமானது. படு விலை குறைவானது. வாருங்கள்... இந்த மந்திரக் கயிறு மூலம் செய்யும் பயிற்சிகளைத் தெரிந்து கொள்வோம். ------------------------------------------------------------------------------------------------- மார்பு, தோள் பயிற்சி இடது காலை வலது காலை விட சற்று முன்பாக நீட்டுங்கள். கயிற்றை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். வலது காலின் கீழ் கயிற்றை மிதித்துக் கொள்ளுங்கள். மேல் கையை கழுத்துக்கு நேராக உயர்த்துங்கள். முன் கை 90ஷீ மடங்கி இருக்க இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தபடி சேர்த்து, பிரித்து பயிற்சி செய்யுங்கள். அடுத்த காலுக்கு கயிற்றை மாற்றி மறுபடியும் அதே போல பயிற்சியைச் செய்யவும். --------------------------------------------------------------------------------------------------- மேல் முதுகு பயிற்சி படத்தில் காட்டியபடி தரையில் படுத்துக் கொண்டு இரண்டு முட்டிகளையும் மடக்குங்கள். கயிற்றை இரண்டு கைகளாலும் பிடித்தபடி இடது காலால் கயிற்றை நேராக வைத்து இழுங்கள். கைகள் இரண்டும் தரையில் விரிந்து படர்ந்து இருக்க வேண்டும். கயிற்றை தள்ளுகிற இடது கால் நேராக மேல் நோக்கி செல்ல வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே இருங்கள். இப்போது இரண்டு கைகளையும் ஒன்றாக இடுப்புக்கு அருகில் வரும்படி சேருங்கள். இதே பயிற்சியை அடுத்த காலில் வைத்து செய்யுங்கள். --------------------------------------------------------------------------------------------------- மார்பு, தோள், பைசெப்ஸ், பயிற்சி நேராக நின்று படத்தில் காட்டியபடி இடது காலை சற்று முன் நகர்த்தி நிற்கவும். கயிற்றை சுவற்றில் இணைத்துவிட்டு வலது கையால் கயிற்றின் இரண்டு பிடிக ளையும் இணைத்து முன்நோக்கி இழுங்கள். கயிறு தோளுக்கு மேல் நேராக இருக்க வேண்டும். இதே பயிற்சியை இடது கையால் அடுத்த முறை செய்யுங்கள். ------------------------------------------------------------------------------------------------- தோள், டிரைசெப்ஸ் பயிற்சி ஒரு சேரை உங்களுக்குப் பின் பக்கத்தில் வைத்துவிட்டு அதற்கு முன் அமர்கிற நிலையில் நின்று இடது கையால் சேரை படத்தில் காட்டியிருக்கிறபடி அழுத்திக் கொள்ளுங்கள். வலது கையை கீழிருந்து மேலாக உயர்த்தி நிறுத்துங்கள். இது ஒரு நிமிடத்திற்கு. அடுத்த கையால் இதே பயிற்சியை மறுபடி யும் செய்யுங்கள். ------------------------------------------------------------------------------------------------------ தோள், மேல் முதுகு பயிற்சி கயிற்றை சுவற்றில் பதித்துவிட்டு அதற்கு முன் நேராக நின்று கயிற்றின் இரு முனைகளையும் இரண்டு கைகளால் பற்றி வெளிப்புறம் நோக்கி கைகளை விரியுங்கள். பிறகு ஒரு கையைப் பின்புறம் இழுக்கவும். பிறகு அடுத்த கையால் பின்புறம் இழுக்கவும். ஒரு நிமிடம் செய்தால் போதும். ----------------------------------------------------------------------------------------------------- முதுகு, தோள், பை செப்ஸ் பயிற்சி படத்தில் காட்டியபடி இடது காலால் நின்று வலது கால் முன் பகுதியில் கயிற்றை மாட்டிக் கொண்டு குனியாமல் கயிற்றின் முனைகளைப் பிடித்து இழுக்கவும். மேல் கை இழுக்கும்போது பின்புறம் போக வேண்டும். இதையே அடுத்த காலில் வைத்து அடுத்த ஒரு நிமிடத்திற்குச் செய்யுங்கள். ------------------------------------------------------------------------------------------------- பைசெப்ஸ் பயிற்சி கயிற்றை சுவரில் மாட்டி படத்தில் காட்டியபடி நின்று கயிற்றின் ஒரு முனையை மட்டும் பிடித்துக் கொண்டு முன் கையை மட்டும் மடக்கி நீட்டவும். இதே பயிற்சியை அடுத்த கைக்கும் செய்யுங்கள். --------------------------------------------------------------------------------------------------- தோள், நடு முதுகு பயிற்சி கயிறு மார்புக்கு நேராக சுவற்றில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கால்களை சற்று பிரித்து முட்டிகள் லேசாக மடங்கி படத்தில் காட்டியபடி சற்று சாய்வாக நில்லுங்கள். இடது கையை, படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளுங்கள். கயிற்றின் இரண்டு முனைகளையும் வலது கையால் பிடித்தபடி பின்பக்கம் வலது - மார்பின் பின்பக்கம் போகும்படி இழுக்கவும். இதையே அடுத்த கையிலும் செய்யுங்கள். ---------------------------------------------------------------------------------------------------- டிரைசெப்ஸ் பயிற்சி கயிறு, சுவற்றில் உங்கள் தலைக்கு நேராகப் பொருத்தப்பட்டிருக்க வேண் டும். சுவற்றைப் பார்த்தபடி இரண்டு கால்களையும் சேர்த்து நேராக கைகளால் பற்றி கீழ்நோக்கி இரண்டு தொடை களுக்குப் பின்புறம் வரும்படி இழுங்கள். ஒரு நிமிடம் இழுத்த நிலையில் நிற்கவும். மறுபடியும் பழைய நிலைக்கு வந்து திரும்பவும் பயிற்சியைச் செய்யுங்கள். ------------------------------------------------------------------------------------------------- பின்புறம், ஹாம்ஸ்டிரிங் பயிற்சி படத்தில் காட்டியபடி ஓடுவதற்கு முன் நிலையில் நின்று கயிற்றை முன்னால் வைத்திருக்கிற இடது காலால் பற்றி, அதன் இரண்டு முனைகளையும் மடக்கி இருக்கிற கைகளால் பற்றி சற்று இழுத்தபடி (மேல் நோக்கி) நின்று கொள்ளுங்கள். வலது கால் பின்பக்கம் நீண்டு மடக்கி, முன்பாதம் சற்று மடங்கி இருக்க வேண்டும். வலது கால் முட்டி தரையைத் தொடுகிற நிலையில் இருக்க வேண்டும். இரண்டு நிமிடம் அப்படியே இருங்கள். பின் அடுத்த காலை வைத்து பயிற்சியைச் செய்யுங்கள். ------------------------------------------------------------------------------------------------- மார்பு, தோள், டிரைசெப்ஸ் பயிற்சி புஷ் அப் எடுப்பது போல முதலில் இருங்கள். பின் இடது கையைத் தூக்கி உடலை நோக்கித் திருப்புங்கள். இடது கால் மேல் வலது கால் இருக்க வேண்டும். ஒரு நிமிடம் தான். பின் இதே முறையில் அடுத்த கை வைத்து பயிற்சியைச் செய்யுங்கள். ------------------------------------------------------------------------------------------------- மேல் முதுகு, பைசெப்ஸ் பயிற்சி கயிற்றை கழுத்துக்கு நேராக சுவற்றில் பொருத்துங்கள். வலது கால் சற்று முன் நீண்டு இருக்க வேண்டும். இரண்டு கைகளாலும் கயிற்றைப் பிடித்து நேராக வரும்படியும், சற்று பக்க வாட்டிலும் இழுங்கள். -------------------------------------------------------------------------------------------------- ஹாம்ஸ்டிரிங், பின்புறம், கீழ் முதுகு பயிற்சி படத்தில் காட்டியபடி நாற்காலி எதுவும் இல்லாமல் உட்காருகிற மாதிரி நில்லுங்கள். கயிறு இரண்டு பாதங்களின் கீழ் வந்து கைகளில் இருக்க வேண்டும். கைகளை மடக்கியபடி மார்புக்கு அருகில் சேருங்கள். ஒரு நிமிடம் நேராக நிற்கும்வரை மூச்சை இழுத்துப் பிடிக்கவும். ------------------------------------------------------------------------------------------------ தோள், டிரைசெப்ஸ் பயிற்சி கால்களை சற்று லேசாகப் பிரித்தபடி ஒரு சேரில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கயிறு நாற்காலியின் கீழ் வந்து உங்கள் கைகளில் அதன் முனைகள் இருக்க வேண்டும். இப்போது கைகளை மேல் நோக்கி முழுதாக உயர்த்துங்கள். இரண்டு நிமிடம் செய்தால் போதும். ---------------------------------------------------------------------------------------------- மேல் முதுகு, தோள், பைசெப்ஸ் பயிற்சி கால்களை சற்று நகர்த்தி நின்று கால்களின் அடியில் வருகிற கயிற்றை இரண்டு கைகளாலும் பற்றியபடி நில்லுங்கள். மடங்கிய மார்புக்கு உள்நோக்கி வரும்படி இருக்க வேண்டும். பிறகு லேசாக ஸ்ட்ரெச் ---------------------------------------------------------------------------------------------------- தோள், பைசெப்ஸ் பயிற்சி சுவற்றில் சாய்ந்து நிற்காமல் குறுக்கு வெட்டு நிலையில் நில்லுங்கள். உங்கள் வலது தோளுக்கு மேல்புறம் சற்று உயரத்தில் கயிறு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பின் இரண்டு கைகளாலும் கயிற்றின் நுனியைப் பிடித்துக் கொண்டு வலது புறத்திலிருந்து இடது புறம் வரும் வரை இழுங்கள். உடல் லேசாகத் திரும்ப வேண்டும். பின் இதே பயிற்சியை இடது புறத்திலிருந்து வலது புறத்திற்குச் செய்யுங்கள்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1868456955535388957

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item