சமையல் குறிப்புகள்! கடிபத்தா தொக்கு
கடிபத்தா தொக்கு தேவையான பொருட்கள் : இளசான கறிவேப்பிலை - 2 கட்டு வெந்தயம் -2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 1 ½ டீஸ்பூன் உளுத்தம் பரு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9900.html
கடிபத்தா தொக்கு
தேவையான பொருட்கள் :
இளசான கறிவேப்பிலை - 2 கட்டு
வெந்தயம் -2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ½ டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ½ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10 ஓமம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் (பொடி) - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ¾ கிண்ணம்
புளி - சிறு எலுமிச்சை உருண்டை
உப்பு - தேவையானது
தண்ணீர் - சிறிது
செய்முறை :
முதலில் கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
எல்லா மசாலாப் பொருட்களையும், தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலையையும் லேசாக வறுத்து, அத்துடன் புளி, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
பின்னர், மீதி நல்லெண்ணையை காய வைத்து அதில் விழுதைப் போட்டு வதக்கவும். வதங்கும் சமயம், வறுத்துப் பொடி செய்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு, பெருங்காயப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி ஆற விடவும்.
இதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு இரண்டு, மூன்று நாட்களுக்கு உபயோகிக்கலாம்.
தோசை மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளவும். சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாகவும் இதை உபயோகிக்கலாம்.
-----------------------------------------------------------------------------------------
Post a Comment