அயல்நாட்டு சமையல்! சிக்கன் மீகொரெய்ங் சூப்பர் மலேசிய ரெசிபி
தேவையானவை: நூடுல்ஸ் பாக்கெட் & 2, பெரிய வெங்காயம் & 1, இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 4 அல்லது 5 பல், சிக்கன் & 100 அல்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8719.html
தேவையானவை:
நூடுல்ஸ் பாக்கெட் & 2, பெரிய வெங்காயம் & 1, இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 4 அல்லது 5 பல், சிக்கன் & 100 அல்லது 150 கிராம் (விருப்பம் போல சிக்கனின் அளவை கூட்டி குறைத்துக் கொள்ளலாம்), பச்சை மிளகாய் & 3, மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் & அரை கப், முளைகட்டிய பச்சைப்பயறு & 2 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் & 2 டீஸ்பூன், அஜினோமோட்டோ & அரை டீஸ்பூன், எண்ணெய் & 3 முதல் 4 டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிஷங்களில் வடித்தெடுத்து, சாதாரண தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிக்கனை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள். ஒரு நிமிஷம் வதங்கியதும், சிக்கனைச் சேர்த்து வதக்குங்கள். சிக்கன் சிறிது வெந்ததும், அத்துடன் முளை கட்டிய பாசிப்பயறு, சோயா சாஸ், அஜினோமோட்டோ, மிளகுத்தூள், நூடுல்ஸ், வெங்காயத்தாள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு கிளறி, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்குங்கள்.
தக்காளி சாஸ§டன் மணக்க மணக்க நூடுல்ஸைப் பரிமாறுங்கள். உடனே தட்டுக்கள் காலியாகும்.
குறிப்பு:
குடமிளகாய், முட்டைகோஸ் போன்ற காய்களையும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கி, வதக்கி, சிக்கனுடன் சேர்ப்பது மலேசியர்களின் வழக்கம்.
Post a Comment